IPL 2027: சீக்ரெட்டாக வெளியான ஐபிஎல் 2027 மினி ஏல தேதி.. பிசிசிஐ திட்டம் இதுதான்!
IPL 2027 Auction Date: ஐபிஎல் 2027 ஏலம் டிசம்பர் 16, 2026 அன்று கோவாவில் உள்ள ஐடிசி கிராண்டில் நடைபெறும் என கிரிக்பஸ் தகவல் தெரிவித்துள்ளது. பிசிசிஐ தளவாடக் குழுவின் வாட்ஸ்அப் செய்தி மூலம் இத்தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் ஏலம் மீண்டும் இந்தியாவில் நடைபெறுவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஐபிஎல் 2027 (IPL 2027) ஏலம் 2026 டிசம்பர் 16ம் தேதி கோவாவில் உள்ள ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்பஸ் அறிக்கையின்படி, பிசிசிஐ (BCCI) ஏலத்திற்கான தேதியை முடிவு செய்திருந்தாலும், ஏலம் நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து ஃபிரான்சைஸ் உரிமையாளர்களுக்கோ அல்லது தலைமைச் செயல் அதிகாரிகளுக்கோ இதுவரை அதிகாரப்பூர்வ மெயில் எதுவும் அனுப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்அப் செய்தி ஒன்றில், ஐபிஎல் 2027-க்கான வீரர் ஏலம் 2026 டிசம்பர் 16 அன்று கோவாவில் உள்ள ஐடிசி கிராண்டில் நடைபெறும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஏலம் தொடர்பான விளக்கக் கூட்டம் 2026 டிசம்பர் 15 அன்று நடைபெறும். பல ஐபிஎல் உரிமையாளர்கள் தங்களுக்கு இந்தச் செய்தி கிடைத்திருப்பதை கிரிக்பஸ்ஸிடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ALSO READ: டெல்லி அணியில் பண்ட் இதற்கு சரியாக இருப்பார்.. ட்விஸ்டை உடைத்த கங்குலி!
பிசிசிஐ-யின் தளவாடக் குழு ஃபிரான்சைஸ்களுக்கு அனுப்பிய ஒரு செய்தியில், ஐபிஎல் 2027 ஏலம் டிசம்பர் 16 அன்று ஐடிசி கிராண்ட் கோவாவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபிரான்சைஸ் உரிமையாளர்களுக்கோ அல்லது தலைமைச் செயல் அதிகாரிகளுக்கோ இதுவரை அதிகாரப்பூர்வமான மின்னஞ்சல் எதுவும் அனுப்பப்படவில்லை என்றாலும், பயண மற்றும் பிற ஏற்பாடுகளை எளிதாக்கும் நோக்கில் இந்தத் தகவல் பகிரப்பட்டுள்ளது.




ஏலத்திற்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது டிசம்பர் 15 அன்று, அதே இடத்தில் ஒரு விளக்கக் கூட்டம் நடத்தப்படும் என்றும், அதன் மூலம் அனைத்து அணிகளும் ஏலத்திற்கான ஏற்பாடுகளை நன்கு புரிந்துகொள்ள முடியும் என்றும் இந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஐபிஎல் ஏலம்:
கடந்த 3 ஆண்டுகளாக ஐபிஎல் ஏலம் வெளிநாட்டில் நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2023-ஆம் ஆண்டுக்கான ஏலம் இந்தியாவில் நடைபெற்றது.
- 2024 ம் ஆண்டுக்கான ஏலம் துபாயில் நடைபெற்றது.
- 2025 ம் ஆண்டுக்கான மாபெரும் ஏலம் ஜித்தாவில் நடைபெற்றது.
- 2026 ம் ஆண்டுக்கான குறு ஏலம் அபுதாபியில் நடைபெற்றது.
தற்போது, ஐபிஎல் ஏலம் மீண்டும் இந்தியாவில் நடைபெறுவதால், கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் உரிமையாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் நிலவுகிறது. இருப்பினும், இந்தத் தேதியில் ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா என்பது பிசிசிஐ-யின் அதிகாரப்பூர்வ மெயிலுக்கு பிறகே உறுதி செய்யப்படும்.
ALSO READ: ஐபிஎல் 2027க்காக முக்கிய முடிவு.. அணிகள் விடுவிக்கப்போகும் வீரர்கள் பட்டியல்!
ஐபிஎல்-இன் கடந்த பதிப்பை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) வென்றது. ரஜத் பதிதார் தலைமையிலான ஆர்சிபி, சிறப்பாகச் செயல்பட்டு, தொடர்ச்சியாக 2 முறை (2025 மற்றும் 2026) பட்டத்தை வென்றது. இந்த 2026ம் ஆண்டு இறுதிப் போட்டியில், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தோற்கடித்தது. இத்தகைய சூழ்நிலையில், இந்த ஏலத்தில் தங்களது அணியை வலுப்படுத்த அனைத்து அணிகளும் எந்தப் புதிய வீரர்கள் மீது நம்பிக்கை வைக்கின்றன என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.