IPL 2027: பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய ஜெயவர்தனே.. மாற்றத்தை எதிர்பார்க்கும் மும்பை இந்தியன்ஸ்!
Mahela Jayawardene Resigns: ஐபிஎல் 2027-க்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து மஹேல ஜெயவர்தனே ராஜினாமா செய்துள்ளார். 2025 மற்றும் 2026 சீசன்களில் MI பயிற்சியாளராகப் பணியாற்றிய ஜெயவர்தனே, முன்னதாக 2017-2022 வரை தலைமைப் பயிற்சியாளராகவும் இருந்தார். மும்பை இந்தியன்ஸ் அணி இந்த விலகலை உறுதிப்படுத்தியுள்ளது.
ஐபிஎல் 2027க்கு (IPL 2027) முன்னதாக மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து மஹேல ஜெயவர்தனே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இலங்கை ஜாம்பவான் பேட்ஸ்மேனான ஜெயவர்தனே கடந்த 2025 மற்றும் 2026 சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்தார். இந்தநிலையில், மஹேல ஜெயவர்தனேவின் ராஜினாமாவை உறுதிப்படுத்தும் ஒரு அறிக்கையை மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டது. ஜெயவர்தனே இதற்கு முன்னர் கடந்த 2017 முதல் 2022 வரையும் மும்பை அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார்.
முன்னதாக, ஜெயவர்தனே கடந்த 2025-ல் மார்க் பவுச்சருக்குப் பதிலாக மும்பை அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் பொறுப்பேற்றார். இதற்கு முன்னர் ஜெயவர்தனே 2022 முதல் 2024 வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் உலகளாவிய செயல்திறன் தலைவர் பதவியை வகித்திருந்தார்.




ALSO READ: அதிரடி காட்டும் டெல்லி கேப்பிடல்ஸ்.. பந்துவீச்சு பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமனம்!
மும்பை அணிக்காக ஜெயவர்தனேவின் செயல்திறன்:
“Mahela has made a significant contribution to Mumbai Indians over the years. His calm leadership, integrity and deep love for the game have meant so much to us.
On behalf of the entire MI family, I want to thank Mahela for his immense contribution and unwavering commitment over the years.
We will always cherish the journey we have shared and the memories we have created together. Mahela will always be a part of our #OneFamily, and we wish him every happiness and success in the journey ahead.”
– Mrs. Nita M. Ambani
— Mumbai Indians (@mipaltan) October 17, 2026
2025-ல் மஹேல ஜெயவர்தனே பயிற்சியாளராக திரும்பிய பிறகு, மும்பை இந்தியன்ஸ் அணி குவாலிஃபையர் 2-க்கு முன்னேறியது. இருப்பினும், தங்களின் ஆறாவது ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற அவர்களின் கனவு நிறைவேறாமல் போனது. இருப்பினும், ஐபிஎல் 2026-ல், மும்பையின் செயல்பாடு மீண்டும் ஏமாற்றமளித்தது; புள்ளிப் பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடத்தைப் பிடித்தது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்த பிறகு மஹேல ஜெயவர்தனே கூறுகையில், “என் இதயத்தில் மும்பை இந்தியன்ஸுக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. நாம் இணைந்து சாதித்ததை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். இனிவரும் காலங்களில் அணிக்கு எனது வாழ்த்துகள்” என்றார்.
ரோஹித் சர்மா மீண்டும் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்ற செய்திகளுக்கு மத்தியில், ஜெயவர்தனே மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விலகியுள்ளார். ஊடக அறிக்கைகளின்படி, மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் ரோஹித்தை மீண்டும் கேப்டனாக நியமிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது. இருப்பினும், இது தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
ALSO READ: மும்பை கேப்டன் பதவிக்கு 2 பேர்.. அனுபவ வீரரா? இளம் வீரரா? யாருக்கு பொறுப்பு?
நீடா அம்பானி வாழ்த்து:
ஜெயவர்தனேவின் எதிர்காலம் குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீடா அம்பானி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மஹேல பல ஆண்டுகளாக அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளார். அவரது நிதானமான தலைமைத்துவம், நேர்மை மற்றும் விளையாட்டின் மீதான ஆழ்ந்த அன்பு ஆகியவை எங்களுக்கு மிகவும் முக்கியமானவை.
முழு மும்பை இந்தியன்ஸ் குடும்பத்தின் சார்பாக, இத்தனை ஆண்டுகளாக அவர் வழங்கிய மகத்தான பங்களிப்பிற்கும், தளராத அர்ப்பணிப்பிற்கும் நான் மஹேலவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நாங்கள் இணைந்து மேற்கொண்ட பயணத்தையும், ஒன்றாக உருவாக்கிய நினைவுகளையும் எப்போதும் போற்றுவோம். மஹேல எப்போதும் எங்கள் #OneFamily (ஒரே குடும்பம்)-ன் ஒரு அங்கமாகவே இருப்பார். அவரது வருங்காலப் பயணம் சிறப்பானதாகவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும் அமைய வாழ்த்துகிறேன்.” என்று தெரிவித்தார்.