AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IPL 2027 : அதில் தோனிக்கு விருப்பமில்லை…. பத்ரிநாத் பரபரப்பு தகவல்

Badrinath Reveals Dhoni’s Plan : மகேந்திர சிங் தோனி 2027 ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நீடித்து வருகிறது. ஒருவேளை அவர் களமிறங்கினால் அவரது ரோல் என்ன என்பது குறித்த சுவாரஸ்யமான தகவல்களை முன்னாள் சிஎஸ்கே வீரர் எஸ். பத்ரிநாத் பகிர்ந்துள்ளார்.

IPL 2027 : அதில் தோனிக்கு விருப்பமில்லை…. பத்ரிநாத் பரபரப்பு தகவல்
எம்.எஸ்.தோனி
Karthikeyan S
Karthikeyan S | Published: 03 Sep 2026 22:03 PM IST

ரசிகர்களால் தல என அழைக்கப்டும் மகேந்திர சிங் தோனி 2027 ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நீடித்து வருகிறது. அவர் இல்லாத சிஎஸ்கே அணியை ரசிகர்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஒருவேளை அவர் களமிறங்கினால் அவரது ரோல் என்ன என்பது குறித்த சுவாரஸ்யமான தகவல்களை முன்னாள் சிஎஸ்கே வீரர் எஸ். பத்ரிநாத் பகிர்ந்துள்ளார்.

தோனியின் முடிவு குறித்து பத்ரிநாத் தகவல்

தற்போது 45 வயதாகும் தோனி, காயம் காரணமாக ஏற்கனவே ஒரு ஐபிஎல் சீசனைத் தவறவிட்ட நிலையில், அவரது ஓய்வு குறித்த விவாதங்கள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. வரவிருக்கும் 2027 சீசனில் அவர் மீண்டும் களமிறங்குவாரா என்பது குறித்து அனைவரிடமும் சந்தேகங்கள் உள்ளன. இதற்கிடையில், தோனியின் எதிர்காலம் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தோனியுடன் தான் மேற்கொண்ட தனிப்பட்ட உரையாடல் குறித்த விவரங்களை அவர் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

இதையும் படிக்க : ஆசிய விளையாட்டுப் போட்டி.. இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ் லட்சுமண் வர வாய்ப்பு

பேட்டிங் செய்வதற்காக மட்டும் இம்பாக்ட் பிளேயராக களமிறங்குவதில் தோனிக்குச் சிறிதும் விருப்பமில்லை என்பதை பத்ரிநாத் தெளிவுபடுத்தினார். தோனி என்னிடம் தனிப்பட்ட முறையில் பேசினார். அப்போது அவர் தான் இம்பாக்ட் பிளேயராக விளையாட மாட்டேன் என்பதை அவர் தெளிவாகக் கூறினார். அணியில் இடம்பெற்றால், முன்புபோல விக்கெட் கீப்பராகவே விளையாட விரும்புவதாகவும், அதாவது 20 ஓவர்களும் களத்தில் இருந்து விக்கெட் கீப்பிங் செய்யவே விரும்புவதாகவும் அவர் கூறியதாக பத்ரிநாத் தெரிவித்தார்.

தோனி முழுநேர வீரராக விளையாடுவது குறித்த தனது கருத்துக்களைபத்ரிநாத் பகிர்ந்துகொண்டார். அவரது வயதைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, ​​முழு 20 ஓவர் போட்டியின் உடல்ரீதியான சவால்களைத் தாங்கும் திறன் தோனியின் உடலுக்குக் கடினமானது என்று தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிக்க : 5 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள்… ஆசியக் கோப்பையில் சாதனை படைத்த இலங்கை வீரர் சமரி அதபத்து!

16வது ஓவருக்குப் பிறகு பேட்டிங் செய்ய வருவது மற்றும் விக்கெட் கீப்பிங்கில் மட்டும் கவனம் செலுத்துவது போன்ற இம்பாக்ட் பிளேயர் ரோலில் விளையாடுவது சிஎஸ்கே அணிக்கு அனுபவ ரீதியாகப் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று பத்ரிநாத் கருத்து தெரிவித்தார். இருப்பினும், அதில் விளையாட தோனிக்கு விருப்பமில்லை என்பது தெளிவாகிறது. ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் வெற்றிகரமான கேப்டனான தோனி, இதுவரை 278 போட்டிகளில் விளையாடியுள்ளார். 242 இன்னிங்ஸ்களில், 38.30 சராசரி மற்றும் 137.45 ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் மொத்தம் 5,439 ரன்களை அவர் குவித்துள்ளார்; இதில் 24 அரைசதங்களும், அதிகபட்சமாக 84 ரன்களும் அடங்கும். சென்னை அணியை ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வெல்லச் செய்த பெருமைக்குரிய சாதனையை அவர் தன்வசம் வைத்துள்ளார்.

Follow Us