AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

BCCI Meeting: 2027 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா விளையாட மாட்டாரா? நாளை கூட்டத்தை கூட்டும் பிசிசிஐ!

Rohit Sharma Future: 2027 ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான நீண்டகாலத் திட்டங்களில் ரோஹித் சர்மாவின் சேர்க்கை குறித்து கேள்விக்குறி எழுந்துள்ளது. இது தவிர, ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்குத் தொடர்ந்து ஏற்படும் காயம் குறித்தும் விரிவாக பேசப்பட இருக்கிறது.

BCCI Meeting: 2027 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா விளையாட மாட்டாரா? நாளை கூட்டத்தை கூட்டும் பிசிசிஐ!
ரோஹித் சர்மா
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 02 Sep 2026 19:01 PM IST

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) தனது தலைமை அலுவலகமான மும்பையில், நாளை அதாவது 2026 செப்டம்பர் 3ம் தேதி மிக முக்கியமான மற்றும் உயர்மட்டக் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளது. இந்தக் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, இந்திய கிரிக்கெட்டின் அனைத்து உயர் அதிகாரிகளும், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் காம்பீர், தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் (CoE) தலைவர் விவிஎஸ் லட்சுமண் ஆகியோர் இன்று அதாவது 20626 செப்டம்பர் 2ம் தேதி இரவு மும்பை வந்தடைகின்றனர். பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சாய்கியா தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், இந்திய சீனியர் ஆண்கள் கிரிக்கெட் அணியின் (Indian Cricket Team) சமீபத்திய செயல்பாடுகள் குறித்து ஆழமாக ஆய்வு செய்யப்படும்.

ALSO READ: இந்திய அணிக்கு என்ன சிக்கல்? ஆராயும் கில்.. பிசிசிஐயிடம் கோரிக்கை!

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து சுற்றுப்பயணத்தின் போது இங்கிலாந்துக்கு எதிரான டி20 சர்வதேசத் தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் ஏற்பட்ட தோல்விகளுக்கான காரணங்களை ஆய்வு செய்வதற்காக இந்தக் கூட்டம் முன்னதாகக் கூட்டப்பட்டது. இருப்பினும், அந்த நேரத்தில் ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரும், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரும் நடைபெற்றுக்கொண்டிருந்ததால், இந்த ஆய்வுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அந்த இரண்டு தொடர்களையும் இந்திய அணி வென்றிருந்தது. தற்போது, ​​மாறியுள்ள சூழ்நிலைகளுக்கு மத்தியில், சமீபத்திய முடிவுகளில் எது சிறப்பாக அமைந்தது, எங்கு தவறுகள் செய்யப்பட்டன என்பது குறித்து பிசிசிஐ நிர்வாகம் விரிவாக ஆராய இருக்கிறது.

ரோஹித் சர்மாவின் எதிர்காலம்:

பிசிசிஐ இந்தக் கூட்டத்திற்கான அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரலை அறிவிக்கவில்லை என்றாலும், இந்த கூட்டத்தில் ரோஹித் ஷர்மாவின் எதிர்காலமே மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கிடைத்த தகவலின்படி, 2027 ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான நீண்டகாலத் திட்டங்களில் ரோஹித் சர்மாவின் சேர்க்கை குறித்து கேள்விக்குறி எழுந்துள்ளது. இது தவிர, ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்குத் தொடர்ந்து ஏற்படும் காயம் குறித்தும் பேசப்படும்.

ALSO READ: இந்திய வீரர்களுக்கு இனி 200% உடற்தகுதி தேவை.. ஸ்ட்ரிட் ரூல் போட்ட பிசிசிஐ..!

நியூசிலாந்துக்கு எதிரான வரவிருக்கும் அனைத்து வடிவத் தொடருக்கான செயல்திட்டத்தையும், சொந்த மண்ணில் நடைபெறவுள்ள பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான ஆயத்தப் பணிகளையும் இந்தக் கூட்டம் வகுக்கும். மேலும், இந்தக் கூட்டத்தில் கேப்டன் பதவி மட்டுமல்லாமல், தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கரின் எதிர்காலம் மற்றும் பதவிக்காலம் குறித்தும் ஒரு முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத் திட்டத்திற்கு இந்தக் கூட்டம் மிகவும் முக்கியமானதாக அமையும்.

Follow Us