AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs AFG: ஆப்கானிஸ்தான் டி20 தொடர்.. சிறந்த பார்மிலும் நீக்கப்பட்ட 3 இந்திய வீரர்கள்!

IND vs AFG T20 Series: இந்திய அணிக்காகத் தொடர்ந்து விளையாடி வரும் 31 வயதான சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவும் ஆப்கானிஸ்தான் தொடருக்கான அணியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் குல்தீப் யாதவ் ஒரு முக்கிய அங்கமாக இருந்தார்.

IND vs AFG: ஆப்கானிஸ்தான் டி20 தொடர்.. சிறந்த பார்மிலும் நீக்கப்பட்ட 3 இந்திய வீரர்கள்!
குல்தீப் யாதவ் - க்ருனால் பாண்ட்யா - ரிங்கு சிங்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 02 Sep 2026 16:19 PM IST

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வரவிருக்கும் டி20 சர்வதேச தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை (Indian Cricket Team) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று அதாவது 2026 செப்டம்பர் 1ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்தத் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் அணிக்குத் தலைமை தாங்குகிறார். அதே நேரத்தில், திலக் வர்மா துணை கேப்டனாக செயல்படுவார். இந்த அணித் தேர்வில் இளம் மற்றும் அனுபவமிக்க வீரர்களின் சமநிலையைப் பராமரிக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சில பெரிய மற்றும் எதிர்பார்க்கப்பட்ட பெயர்கள் அணியில் இடம்பெறவில்லை. இது கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் நிபுணர்கள் மத்தியில் பெரும் விவாதத்தைத் தூண்டியுள்ளது. குறிப்பாக ரிங்கு சிங், குல்தீப் யாதவ் மற்றும் க்ருணால் பாண்ட்யா (Krunal Pandya) போன்ற 3 முக்கிய வீரர்கள் அணியில் சேர்க்கப்படாதது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ALSO READ: ரசிகர்கள் ஹேப்பி.. உள்ளே வந்த சஞ்சு சாம்சன்.. சொன்னதை செய்த பிசிசிஐ

3 முக்கிய வீரர்கள் அணியிலிருந்து நீக்கம்:

ரிங்கு சிங்:

இந்தியாவின் கடைசி டி20 தொடரில் விளையாடிய அதிரடி ஃபினிஷர் ரிங்கு சிங், இந்த முறை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ரிங்கு இதுவரை இந்தியாவுக்காக 48 டி20 சர்வதேசப் போட்டிகளில் 3 அரைசதங்கள் உட்பட, 156.34 என்ற சிறப்பான ஸ்டிரைக் ரேட்டில் 702 ரன்கள் எடுத்துள்ளார். கடைசி ஓவர்களில் போட்டிகளை முடித்து வைக்கும் திறன் ரிங்கு சிங்குவிடம் இருந்தபோதிலும், அவர் அணியில் சேர்க்கப்படாதது ஆச்சரியமாகக் கருதப்படுகிறது.

குல்தீப் யாதவ்:

இந்திய அணிக்காகத் தொடர்ந்து விளையாடி வரும் 31 வயதான சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவும் ஆப்கானிஸ்தான் தொடருக்கான அணியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் குல்தீப் யாதவ் ஒரு முக்கிய அங்கமாக இருந்தார். மேலும் கடைசியாக உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடினார். இந்திய அணிக்காக 54 டி20 போட்டிகளில் 95 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்படாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

க்ருணால் பாண்ட்யா:

கடந்த 2 ஐபிஎல் சீசன்களில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் 35 வயதான ஆல்-ரவுண்டர் க்ருணால் பாண்ட்யா, இந்தத் தொடரின் மூலம் தேசிய அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. க்ருணால் பாண்ட்யா கடைசியாக 2021-ல் இந்தியாவுக்காக ஒரு சர்வதேசப் போட்டியில் விளையாடினார். அணியில் தேர்வு செய்யப்படாத நிலையில், “இன்னும் நம்பிக்கை இருக்கிறது” என்று சமூக வலைதளத்தில் ஒரு ஸ்டோரியைப் பகிர்ந்து தனது உணர்வுகளை வெளிப்படுத்தினார். க்ருணால் பாண்ட்யா இந்தியாவுக்காக 19 டி20 போட்டிகளில் 10 இன்னிங்ஸ்களில் 124 ரன்களும், 15 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

ALSO READ: இந்திய அணியில் கிடைக்காத இடம்.. விரக்தியில் க்ருனால் பாண்ட்யா.. வைரலாகும் போஸ்ட்!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் 15 பேர் கொண்ட முழுமையான டி20 அணி:

ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் சிங் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷிதீப் ரமும்ரா பிஷ்னோய்.

Follow Us