AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? வரும் செப். 6ஆம் தேதி முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்..

Diwali Ticket Booking: இந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி கொண்டாடப்பட உள்ளதால், அதற்கு முன்னதாகவும், பின்னதாகவும் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்ய மக்கள் திட்டமிட்டு வருகின்றனர். அதன்படி, நவம்பர் 5-ம் தேதி பயணம் செய்ய விரும்புவோர் செப்டம்பர் 6-ம் தேதி முன்பதிவு செய்யலாம்.

தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? வரும் செப். 6ஆம் தேதி முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 02 Sep 2026 16:03 PM IST

செப்டம்பர் 2, 2026: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிடும் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தீபாவளி ரயில் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு வரும் செப்டம்பர் 6-ம் தேதி முதல் தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் ரயில் சேவைகள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் ரயில்கள் மற்றும் சிறப்பு சேவைகள் அறிவிக்கப்படுவது வழக்கம்.

தீபாவளி டிக்கெட் முன்பதிவு – எப்போது முதல்?

இந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி கொண்டாடப்பட உள்ளதால், அதற்கு முன்னதாகவும், பின்னதாகவும் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்ய மக்கள் திட்டமிட்டு வருகின்றனர். அதன்படி, நவம்பர் 5-ம் தேதி பயணம் செய்ய விரும்புவோர் செப்டம்பர் 6-ம் தேதி முன்பதிவு செய்யலாம். நவம்பர் 6-ம் தேதி பயணம் செய்ய விரும்புவோர் செப்டம்பர் 7-ம் தேதி முன்பதிவு செய்ய வேண்டும்.

மேலும் படிக்க: 1 வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய இரும்பு கம்பி.. அரசு மருத்துவர்கள் செய்த நுட்பமான ஆபரேசன்.. ஈரோட்டில் அதிர்ச்சி சம்பவம்!

அதேபோல், நவம்பர் 9-ம் தேதி திரும்பிச் செல்ல விரும்புவோர் செப்டம்பர் 10-ம் தேதியும், நவம்பர் 10-ம் தேதி பயணம் செய்ய விரும்புவோர் செப்டம்பர் 11-ம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

காலை 8 மணிக்கு தொடங்கும் முன்பதிவு:

ரயில் டிக்கெட் முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கும் என்பதால், பயணிகள் தங்களது பயண விவரங்கள் மற்றும் தேவையான ஆவணங்களை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் காலை 8 மணிக்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தீபாவளி பண்டிகை நெருங்கும் சூழலில், சென்னையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இணைக்கும் வகையில் சிறப்பு ரயில்களும் ஒன்றன்பின் ஒன்றாக தெற்கு ரயில்வே தரப்பில் அறிவிக்கப்படும்.

சிறப்பு ரயில்கள் எப்போது அறிவிக்கப்படும்?

தற்போதைக்கு ஏற்கனவே இயக்கத்தில் உள்ள வழக்கமான ரயில்களுக்கான முன்பதிவு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு விசேஷ நாள், விடுமுறை நாள் மற்றும் பண்டிகை காலங்களிலும் பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படுவது வழக்கம்.

மேலும் படிக்க: “2029ல் பிரதமர் வேட்பாளர் யார்?”.. காங்கிரஸ் MLA தாரகை கத்பர்ட் vs தவெக MLA கனிமொழி மோதல்!!

அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், நவம்பர் மாதம் தொடங்கிய பின்னர் சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்புகள் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ள மக்கள், தற்போது வெளியிடப்பட்டுள்ள முன்பதிவு வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us