AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அரசன் – ராஜன் வகையரா படங்களின் தற்போதைய நிலை என்ன? சமுத்திரகனி கொடுத்த அப்டேட்

Samuthirakani talks about Arasan and Rajan Vagaiyara movies | தென்னிந்திய மொழிகளில் பிரபல இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வருபவர் சமுத்திரகனி. இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் அரசன் மற்றும் ராஜன் வகையரா படங்கள் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அரசன் – ராஜன் வகையரா படங்களின் தற்போதைய நிலை என்ன? சமுத்திரகனி கொடுத்த அப்டேட்
சமுத்திரகனிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Sep 2026 15:19 PM IST

தமிழ் சின்னத்திரையில் சீரியல்களை இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் சமுத்திரகனி. இவரது இயக்கத்தில் சின்னத்திரையில் வெளியான சீரியல்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் சமுத்திரகனி. தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது போல இவர் நடிகராக நடித்தப் படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து இவர் நடிப்பு வாழ்க்கையை தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் தொடர்ந்து நாயகனாக நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து பலதரப்பட்ட கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து வருகின்றனர். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இந்த நிலையில் இவர் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து இயக்குநர் பணிக்கு ஓய்வு கொடுத்துவிட்டு தொடர்ந்து படங்களில் நடிப்பதை மட்டுமே அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி இந்த 2026-ம் ஆண்டில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் இதுவரை நடிகர் சமுத்திரகனி நடிப்பில் அடுத்தடுத்து 4 படங்கள் திரையரங்குகளில் வெளியானது. இதனைத் தொடர்ந்து இன்னும் சில படங்கள் திரையரங்குகளில் வெளியாக வைரலாகி வருகின்றது.

அரசன் – ராஜன் வகையரா படங்களின் தற்போதைய நிலை என்ன?

இந்த நிலையில் நடிகர் சமுத்திரகனி சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு அவர் அடுத்தடுத்து நடித்து வரும் படங்கள் குறித்து அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி அவர் பேசியதாவது, எல்லாம் தயாராகி வருகின்றன. தற்போது அரசன்’படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது, அதில் நாங்களும் நடித்து வருகிறோம். அரசன் பணிகள் முடிந்த பிறகு வட சென்னை 2 வரும். அதேவேளையில், ராஜன் வகையறா படமும் தயாராகி வருகிறது. அனைத்தும் சிறப்பாகச் சென்று கொண்டிருக்கின்றன; ராஜன் வகையறா இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியாகும். அனைத்தும் மிகச் சிறப்பாக அமைந்து வருகின்றன என்று அவர் தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ஃபெண்டாஸ்டிக்… அவுட் ஸ்டாண்டிங்… மார்வலஸாக வெளியானது சர்தார் 2 படத்தின் ட்ரெய்லர்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… பெத்தலேகம் குடும்ப யூனிட் படம் பாத்துட்டீங்களா? அப்போ மிஸ் பண்ணாம இந்த சோல்மேட்ஸ் ஒரு சாத்துகுடி பிரணயம் ஷார்ட் ஃபிலிம் பாருங்க

Follow Us