ஃபெண்டாஸ்டிக்… அவுட் ஸ்டாண்டிங்… மார்வலஸாக வெளியானது சர்தார் 2 படத்தின் ட்ரெய்லர்
Sardar 2 Movie Official Trailer Tamil | நடிகர் கார்த்தியின் நடிப்பில் தற்போது உருவாகி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் சர்தார் 2. இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ள நிலையில் அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகர் கார்த்தியின் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் முதலாவதாக வா வாத்தியார் என்ற படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில் நடிகர் கார்த்தியின் நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் சர்தார் 2. இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த 2022-ம் ஆண்டு வெளியானது. அது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து அந்தப் படத்தின் தொடர்ச்சியாக தற்போது சர்தார் 2 படம் உருவாகி உள்ளது.
இந்த இரண்டாம் பாகத்தையும் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பிஎஸ் மித்திரன் தான் எழுதி இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சர்தார் 2 படத்தில் முதல் பாகத்தில் நடித்த நடிகர்களுடன் இணைந்து புது நடிகர்களும் இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இந்த சர்தார் 2 படத்தில் நடிகர்கள் கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு, ரஜிஷா விஜயன் உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




இந்த நிலையில் சர்தார் 2 படம் வருகின்ற 10-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் கோலாகலமாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் படக்குழு தற்போது சர்தார் 2 படத்தின் ட்ரெய்லரை இணையத்தில் வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… நிவின் பாலியின் பெத்தலேக குடும்ப யூனிட் படத்தை ரசிகர்கள் கொண்டாட என்ன காரணம்?
சர்தார் 2 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Sardar2Trailer is here 🔥
We’ve been waiting to show you this spectacle 💥https://t.co/GkABVTXmF5
Idhu oru Miga Periya Fan Boy Sambhavam from @Psmithran ⚡️
Agent @Karthi_Offl arrives in STYLE 🗡️@iam_SJSuryah @ivyofficial2023 @SamCSmusic @george_dop @editorvijay…
— Prince Pictures (@Prince_Pictures) August 31, 2026
Also Read… Thagappan: ஜீவாவின் தகப்பன் படத்தின் ஷூட்டிங் ஓவர் – கொடுத்ததுடன் வெளியான வீடியோ!