AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மார்க் ஆண்டனி படம் குறித்து எஸ்.ஜே.சூர்யாவிடம் கலகப்பாக பேசிய கார்த்தி – வைரலாகும் வீடியோ!

Karthi talks about Mark Antony movie | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் சர்தார் 2. இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் மார்க் ஆண்டனி படம் குறித்து கார்த்தி பேசியது வைரலாகி வருகின்றது.

மார்க் ஆண்டனி படம் குறித்து எஸ்.ஜே.சூர்யாவிடம் கலகப்பாக பேசிய கார்த்தி – வைரலாகும் வீடியோ!
கார்த்தி மற்றும் எஸ்.ஜே.சூர்யாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 30 Aug 2026 17:15 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் கார்த்தியின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் சர்தார் 2. இந்தப் படத்தின் முதல் பாகம் வெளியான போதே படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகும் என்று தெரிவித்த போது படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஹிட் படங்களை கொடுத்து வரும் நடிகர் கார்த்திக்கு இந்த சர்தார் 2 படமும் மாபெரும் வரவேற்பைப் பெறும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்தப் படத்தை இயக்குநர் பி.எஸ்.மித்திரன் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி உடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா உட்பட நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். தொடர்ந்து இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

மார்க் ஆண்டனி குறித்து எஸ்.ஜே.சூர்யாவிடம் கலகப்பாக பேசிய கார்த்தி:

அந்த வகையில் சர்தார் 2 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசிய போது மாநாடு மற்றும் மார்க் ஆண்டனி படத்திற்கு பிறகு இந்த சர்தார் 2 தான் எனக்கு ஒரு ஹைப் கொடுத்தது என்று கூறினார். அப்போது பேசிய கார்த்தி, மார்க் ஆண்டனி சொல்லும் போது எனக்கு நியாயமாக வருது. ரொம்ப என்ஜாய் பண்ணேன் சார். உங்கலுக்கு போன் பண்ணி சொன்னேன். அந்த பஸ்ல சிலுக்கா நான் தியேட்டர்ல எகிரி குதிச்சிட்டேன். ஆ, நம்ம ஆளு வந்துட்டான்பானு போன் பண்ணி சொன்னேன். எத்தனையோ நல்ல காட்சிகள் இருக்கு. இந்த காட்சி தியேட்டரே தெரிச்சிடுச்சு என்று கார்த்தி தெரிவித்து இருந்தார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்தது இதயம் முரளி படம்… மகிழ்ச்சியில் படக்குழு

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… தியேட்டரின் வெற்றிநடை போடும் விஸ்வநாத் & சன்ஸ் படம்… படக்குழு வெளியிட்ட போஸ்டர்

Follow Us