Duleep Trophy 2026: டிஆர்எஸ் மூலம் வீழ்ந்த விக்கெட்.. 15 வயதில் கேப்டனாக அசத்தும் வைபவ் சூர்யவன்ஷி.. வைரலாகும் வீடியோ!
Vaibhav Sooryavanshi DRS: துலீப் கோப்பை 2026-இன் 2 அரையிறுதிப் போட்டிகளும் இன்று அதாவது 2026 செப்டம்பர் 30ம் தேதி முதல் தொடங்கியுள்ளன. முதல் அரையிறுதிப் போட்டி கிழக்கு மண்டலத்திற்கும் மத்திய மண்டலத்திற்கும் இடையே நடைபெறுகிறது. டாஸ் வென்ற கிழக்கு மண்டலம் முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.
உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளில் இளம் நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) ஏற்கனவே தனது பேட்டிங்கால் உலகைக் கவர்ந்துள்ளார். மேலும், பிசிசிஐ (BCCI) நடத்தி வரும் துலீப் கோப்பை போட்டியில் பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்பட்டார். தற்போது, அரையிறுதிப் போட்டியில் கேப்டனாக அவரது செயல்பாட்டிற்காகவும் வைபவ் சூர்யவன்ஷி பாராட்டப்படுகிறார். கேப்டனாக, முதல் ரிவ்யூ எடுப்பதற்கு முன்பு பந்துவீச்சாளர் மற்றும் விக்கெட் கீப்பரிடம் பேசிய வைபவ் சூர்யவன்ஷி, நேர வரம்பு முடிவதற்கு 3 வினாடிகளுக்கு முன்பு ரிவ்யூவுக்கு சைகை காட்டினார். தற்போது, இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ALSO READ: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அண்டர் 19 தொடர்.. வைபவ் சூர்யவன்ஷி தேர்ந்தெடுக்கப்படாதது ஏன்?




இன்று முதல் தொடங்கிய அரையிறுதி போட்டிகள்:
துலீப் கோப்பை 2026-இன் 2 அரையிறுதிப் போட்டிகளும் இன்று அதாவது 2026 செப்டம்பர் 30ம் தேதி முதல் தொடங்கியுள்ளன. முதல் அரையிறுதிப் போட்டி கிழக்கு மண்டலத்திற்கும் மத்திய மண்டலத்திற்கும் இடையே நடைபெறுகிறது. டாஸ் வென்ற கிழக்கு மண்டலம் முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. காயம் காரணமாக கிழக்கு மண்டல கேப்டன் இஷான் கிஷன் விலகியதால், முதல் நாளில் வைபவ் சூர்யவன்ஷி அணிக்குத் தலைமை தாங்கினார். வைபவ் அணியின் துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேரம் முடிவதற்கு 3 வினாடிகளுக்கு முன்பு ரிவ்யூ:
Stand-in Captain Vaibhav Sooryavanshi goes for the review with 3 seconds remaining…and gets it right 👏
DRS done right as the set Aryan Juyal (46) is dismissed ✅
The celebrations say it all 🙌#DuleepTrophy pic.twitter.com/IwBQbr8hJQ
— BCCI Domestic (@BCCIdomestic) August 30, 2026
ஆர்யன் ஜுயல் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது 40வது ஓவரின் இரண்டாவது பந்தை முகேஷ் குமார் ஆஃப்-ஸ்டம்ப் கோட்டில் வீசினார். இதனால், பேட்ஸ்மேன் ஏமாற்றப்பட்டார். இஷான் கிஷனுக்குப் பதிலாக விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்த குமார் குஷாக்ரா, பந்தைப் பிடித்து அப்பீல் செய்தார். ஆனால், நடுவர் அதை நிராகரித்து, அது அவுட் இல்லை என்று அறிவித்தார். ஸ்லிப்ஸில் நின்று கொண்டிருந்த கேப்டன் வைபவ் சூர்யவன்ஷியும் பேட்ஸ்மேன் அவுட் ஆகிவிட்டார் என்றே நம்பினார். இதனால், வைபவ் சூர்யவன்ஷி ரிவ்யூ எடுப்பதற்கு முன்பு பந்துவீச்சாளர் மற்றும் விக்கெட் கீப்பரிடம் பேசினார். ரிவ்யூ எடுப்பதற்கான நேரம் முடிவதற்கு 3 வினாடிகளே இருந்த நிலையில், வைபவ் ரிவ்யூ எடுத்தார்.
மறுபரிசீலனையில், பந்து பேட்ஸ்மேன் ஆர்யனின் பேட்டில் பட்டு விக்கெட் கீப்பரிடம் சென்றது தெரியவந்தது. மூன்றாவது நடுவர், கள நடுவரின் முடிவை மாற்றி, அவரை ஆட்டமிழந்ததாக அறிவித்தார். 46 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த ஆர்யனின் விக்கெட் முக்கியமானதாக இருந்தது. முதல் இன்னிங்ஸில் மத்திய மண்டலத்தின் நான்காவது விக்கெட் இதுவாகும். 99 ரன்கள் எடுத்திருந்தபோது இந்த விக்கெட் வீழ்ந்தது.
ALSO READ: நீக்கப்பட்ட பிறகு முதல் முறை.. பொதுவெளியில் மனம் திறந்த சூர்யகுமார் யாதவ்!
வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி:
துலீப் கோப்பை வரலாற்றிலேயே மிக இளம் வயது கேப்டன் என்ற பெருமையை வைபவ் பெற்றுள்ளார். 15 வயதில் வைபவ் சூர்யவன்ஷி இந்த சாதனையை படைத்தார்.