ஐடி வேலையை உதறிவிட்டு விவசாயத்தில் இறங்கிய நபர்.. தற்போது ரூ.600 கோடி ஆண்டு வருமானம் ஈட்டும் நிறுவனத்தின் சொந்தக்காரர்.. யார் இந்த சசிகுமார்?
Akshaya Kalpa Organic Sasikumar Success Story | கை நிறைய சமபளம் வாங்கிக்கொண்டு இருந்த ஐடி வேலையை உதவிட்டு விவசாயத்தில் இறங்கிய சசிகுமார், தற்போது ஆண்டுக்கு ரூ.600 கோடி வருமானம் ஈட்டும் நிறுவனத்தின் அதிபதியாக உள்ளார். அவரது வெற்றிக் கதை குறித்து விரிவாக பார்க்கலாம்.
தற்போதைய கால சூழலில் நல்ல வேலை, மாதமானால் கை நிறய சம்பளம் இவ்வளவு தான் பெரும்பாலான நபர்களின் குறிக்கோளாக இருக்கிறது. அவ்வாறு ஏசி அறைக்குள் அமர்ந்து ஒரே மாதிரியான வேலையை செய்வது சற்று எரிச்சலை ஏற்படுத்தும் விதமாக இருந்தாலும், நல்ல சம்பளம் கிடைக்கிறது என்பதால் பலரின் தேர்வு மாத சம்பள வேலையாக உள்ளது. இந்த நிலையில் தான், நல்ல வேலை, மாதம் மாதம் கை நிறைய சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்த நவர் ஒருவர் தான் பார்த்துக்கொண்டு இருந்த ஐடி வேலையை உதறிவிட்டு, விவசாயத்தில் கால் பதித்து சாதித்துள்ளார். அவர் யார், என்ன செய்துக்கொண்டு இருக்கிறார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வேலையை உதறிவிட்டு விவசாயத்தில் இறங்கிய நபர்
பெங்களூரில் பட்டப்படிப்பை முடித்து, சிக்காகோவில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தவர் தான் சசிகுமார். இவர் தனது படிப்பை முடித்த உடன் பல ஆண்டுகள் ஐடி துறையில் பணியாற்றி வந்துள்ளார். குறிப்பாக இந்தியாவில் உள்ள பெரிய நிறுவனங்களில் ஒன்றான விப்ரோவில் லீட் ஆர்கிடெக்ட் ஆக சுமார் 12 ஆண்டுகள் வேலை செய்துள்ளார். கேட்போர் வியந்துபோகும் அளவுக்கு நல்ல சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்த அவர், 2010 ஆம் ஆண்டு திடீரென தான் செய்துக்கொண்டு இருந்த வேலையை ராஜினாமா செய்தார்.
இதையும் படிங்க : Gold : 10 கிராம் தங்கம் ரூ.15 லட்சம் வரை செல்லும்.. தாமஸ் கப்லான் சொன்ன ஷாக் தகவல்.. அதிர்ச்சியில் நகை பிரியர்கள்!




அக்ஷயா கல்பா உருவானது இப்படி தான்
ஐடி துறையை விட்டுவிட்டு விசாயம் செய்யப்போகிறேன் என கூறியதும் அவரின் தந்தை அவருடன் பேசுவதை நிறுத்திக்கொண்டுள்ளார். சுமார் 8 ஆண்டுகள் அவர் பேசாமலே இருந்துள்ளார். சசிகுமாருக்கு விவாசயம் செய்ய வேண்டும் என்பது பலநாள் கனவு. தான் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் சிறு வயது முதலே விவசாயத்தை பார்த்து வளர்ந்ததால் அவருக்கு அதில் மிகுந்த ஆர்வம் இருந்து வந்துள்ளது. ஆனால், தந்தையின் ஆசைக்காக அவர் ஐடி துறையில் நுழைந்துள்ளார்.
பால் பண்ணை மூலம் தொடங்கிய சாம்ராஜ்யம்
இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் இருந்த அவர், உடுப்பியை சேர்ந்த ஒரு விவசாயியை சந்தித்துள்ளார். வெறும் 2 ஏக்கர் நிலத்திலேயே இயற்கை விவசாயம் செய்யலாம் என அவர் கூறியது மிகவும் உந்துதலாக இருந்த நிலையில், தனது முடிவில் மேலும் தீவிரமாக இறங்கியுள்ளார். அதன்படி, முதலில் ஒரு பால் பண்ணையை தொடங்கினார். அதற்கு அக்ஷய கல்பா ஆர்கானிக் என பெயர் வைத்த அவர், ஆரம்ப காலக்கட்டத்தில் கடும் சவால்களை எதிர்க்கொண்டார்.
இதையும் படிங்க : இன்னும் 3 நாட்களே உள்ளன.. கேஸ் சிலிண்டர் கேஒய்சி முடிக்கவில்லை என்றால் சிக்கல்!
ரூ.40 லட்சத்தை வைத்து மீண்டு வந்த சசிகுமார்
குறிப்பாக 10 முறை அந்த நிறுவனத்தை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டார். என்ன செய்வது என தெரியாமல் தவித்த அவருக்கு அவரது மனைவி கொடுத்த ரூ.30 லட்சம் மற்றும் அவரது மாமா கொடுத்த ரூ.10 லட்சம் தான் உதவியாக இருந்தது. மூடும் நிலைக்கு செல்லப்பட்ட நிறுவனத்தை அந்த ரூ.40 லட்சத்தை வைத்து மீட்டு கொண்டுவந்துள்ளார். தற்போது பால் உற்பத்தி, தேனி வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு என பல்வேறு இயற்கை விவசாய முறைகளை அந்த நிறுவனம் கையாண்டு வருகிறது.
தற்போது அக்ஷய கல்பா நிறுவனத்தில் சுமார் 2,800 விவசாயிகள் உள்ளனர். அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1.28 லட்சம் வருமானமாக வழங்கப்படுகிறது. அந்த நிறுவனத்தின் ஆண்டு வருமானம் தற்போது ரூ.600 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.