AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Tamil Nadu Weather report: அடுத்த 4 நாட்களுக்கு 5 டிகிரி வரை வெப்பநிலை உயரும் – வானிலை மையம் எச்சரிக்கை

Tamil Nadu weather : தமிழகத்தில் ஆகஸ்ட் 31, 2026 முதல் செப்டம்பர் 3, 2026 வரை 4 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

Tamil Nadu Weather report: அடுத்த 4 நாட்களுக்கு 5 டிகிரி வரை வெப்பநிலை உயரும் – வானிலை மையம் எச்சரிக்கை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 30 Aug 2026 16:59 PM IST

சென்னை, ஆகஸ்ட் 30 : தமிழகத்தில் ஆகஸ்ட் 31, 2026 முதல் செப்டம்பர் 3, 2026 வரை ஒரு சில இடங்களில் வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் பிற பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை உயரும்  என வானிலை மையம் எச்சரிக்கை

அதனைத் தொடர்ந்து வருகிற செப்டம்பர் 1, 2026 மற்றும் செப்டம்பர் 2, 2026 ஆகிய 2 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  மதுபோதையில் வெடித்த குடும்பத் தகராறு.. பெற்ற மகளையும், தாயையும் சரமாரியாக வெட்டி கொன்ற கொடூரம்.. தருமபுரியை உலுக்கிய துயரம்!

அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 3, 2026 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செப்டம்பர் 4, 5, 2026 ஆகிய 2 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஆகஸ்ட் 31, 2026 நாளை முதல் செப்டம்பர் 3, 2026 வரை அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

இதையும் படிக்க : “ஜெயலலிதாவே சவால்களைச் சந்தித்தார்”.. முதல்வர் விஜய்க்கு ஆர்.எஸ். பாரதி சவால்.. வார்த்தைக்கு வார்த்தை வெடித்த சர்ச்சை!!

சென்னையப் பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆகஸ்ட் 31, 2026 நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Follow Us