AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நேபாள வெள்ளத்தில் சிக்கிய 400 தமிழர்கள்… 90 பேர் பற்றி தகவலில்லை – அமைச்சர் ராஜ்மோகன் தகவல்

Tamils Trapped in Floods : நேபாள வெள்ளத்தில் 400 தமிழர்கள் சிக்கியுள்ளதாகவும் அதில் 90 பேரின் நிலை என்னவென்றே தெரியவில்லை எனவும் பள்ளிகல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்தெரிவித்துள்ளார். தற்போது வரை கும்பகோணத்திலிருந்து சென்ற 21 தமிழர்கள் பாதுகாப்பாக இன்று சென்னை வந்துள்ளனர்

நேபாள வெள்ளத்தில் சிக்கிய 400 தமிழர்கள்… 90 பேர் பற்றி தகவலில்லை – அமைச்சர் ராஜ்மோகன் தகவல்
அமைச்சர் ராஜ்மோகன்
Karthikeyan S
Karthikeyan S | Published: 29 Aug 2026 20:44 PM IST

சென்னை, ஆகஸ்ட் 29 : தற்போது வரை தமிழ்நாட்டில் இருந்து 400 பேர் நேபாளத்திற்கு சென்றுள்ளதாகவும் அதில் 90 பேரின் நிலை என்னவென்றே தெரியவில்லை என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். முன்னதாக நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கியவர்கள் 103 பேர் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது நேபாளம் சென்ற தமிழர்களின் எண்ணிக்கை 400 பேர் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் பற்றி அமைச்சர் ராஜ்மோகன் தகவல்

நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களில் 21 பேர் சென்னை திரும்பி உள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் இருந்து நேபாள பெரு வெள்ளத்தில் 400 பேர் சிக்கியுள்ளதாக பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் கூறி உள்ளார். மேலும் பேசிய அவர், சென்னை மற்றும் கும்பகோணம் தனியார் டிராவல்ஸ் ஏஜென்சிகளில் புக் செய்து 103 பேர் நேபாளம் சென்றதாக விசாரணையில் தெரிந்தது. இந்த நிலையில் கும்பகோணம் ஏஜென்சி மூலமாக சென்ற 21 பேர் தற்போது பத்திரமாக சென்னை வந்துள்ளனர்.

இதையும் படிக்க : “கோயிலுக்கும் திமுகவினருக்கும் என்ன சம்பந்தம்?”.. அறங்காவலர் குழு நியமனம் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் பளார்!

இவர்கள் மட்டுமல்லாமல தமிழ்நாட்டில் இருந்து ரயில் மூலம் நேபாளம் சென்ற 140 பேர் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. இவர்கள் தவிர மேலும் சிறு, சிறு குழுக்களாக நேபாளம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை கண்டறியும் பணியும் நடைபெற்று வருகிறது. தற்போது வரை தமிழகத்தில் இருந்து 400 பேர் வரை நேபாளம் சென்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 140 பேர் பாதுகாப்பாக உள்ளனர். முதற்கட்டமாக 21 பேர் சென்னை வந்துள்ளனர். மேலும் நேபாள வெள்ளத்தில் சிக்கிய 90 பேரின் நிலைமை என்னவானது என்பது தெரியவில்லை. அவர்களை கண்டுபிடிக்கும் பணிகள் நடக்கின்றன என்று தெரிவித்தார்.

நேபாள – திபெத் எல்லைக்கு அருகே ஏற்பட்ட பனிப்பாறை சரிவைத் தொடர்ந்து நிகழ்ந்த ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நேபாளத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதன் விளைவாக பல பகுதிகள் முற்றிலும் அழிந்தன. இந்த வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 675ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2,400க்கும் மேற்பட்டவர்களை இன்னும் காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தற்போது வரை மீட்கப்பட்டவர்களில் 114 இந்தியர்கள், 27 சீனர்கள் மற்றும் 20 தென் கொரிய சுற்றுலாப் பயணிகள் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : “எந்த திட்டமானாலும் விவசாய நிலத்தை எடுத்தாக வேண்டும்”.. அமைச்சர் செங்கோட்டையன் பேச்சால் சர்ச்சை.. சிபிஎம் சண்முகம் கடும் கண்டனம்!!

மேலும் நேபாளத்தின் ராசுவா பகுதிக்கு புனித யாத்திரை சென்ற 100க்கும் மேற்பட்ட தமிழர்கள், போடே கோசி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கினர். சாவின் விளிம்பு வரை சென்று மீட்கப்பட்ட 21 தமிழர்கள் ஆகஸ்ட் 29, 2026 இன்று சென்னை அழைத்துவரப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us