தங்கல், கனா மாதிரி மண்டாட்டி படத்தையும் சீனாவில் ரிலீஸ் செய்ய வேண்டும் – நடிகர் சத்யராஜ்
Actor Sathyaraj Speech at Mandaadi movie | தமிழ் சினிமாவில் பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரப்லாமானவர் நடிகர் சத்யராஜ். இவர் சமீபத்தில் மண்டாட்டி பட விழாவில் பேசியது தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் வில்லனாக தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் நடிகர் சத்யராஜ். அவரது உயரம் மற்றும் உருவ தோற்றம் என அனைத்தும் வில்லனாக நடிக்கும் போது பார்க்கும் பார்வையாளர்களை பயத்தில் ஆழ்த்தும் திறமை கொண்டவர் நடிகர் சத்யராஜ். இவர் தொடர்ந்து வில்லனாக நடித்து வந்த நிலையில் பிறகு தமிழ் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். அவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் சத்யராஜ் பல கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளிலும் நடிகர் சத்யராஜ் பிசியான நடிகராக வலம் வருகிறார். எந்தப் படத்தில் நடித்தாலும் அந்தப் படத்தின் கதாபபத்திரத்தை சிறப்பாக செய்து ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் சத்யராஜ் தற்போது நடிகர் சூரியின் நடிப்பில் உருவாகி வரும் மண்டாட்டி படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் வெளியான போது அதில் நடிகர் சத்யராஜின் கதாப்பாத்திரம் பார்த்து ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும் திரையரங்குகளில் அந்தப் படத்தினை பார்க்க ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.




மண்டாட்டி படத்தையும் சீனாவில் ரிலீஸ் செய்ய வேண்டும்:
இந்த நிலையில் நேற்று மண்டாட்டி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் படத்தில் நடித்த படகுழுவினர் மட்டும் இன்றி பல பிரபலங்கள் கலந்துகொண்டு பேசியது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் நடிகர் சத்யராஜ் ஆமிர் கானின் தங்கல், 3 இடியட்ஸ் மற்றும் சல்மான் கானின் படங்கள் சீனாவில் 5000 திரையரங்குகளில் வெளியாகின்றன. இப்படம் ஒரு வாரம் ஓடினாலே, எளிதாக 1000 கோடி ரூபாய் வசூலை எட்டிவிடும். சிவகார்த்திகேயனின் கனா படமும் அங்கு வெளியானது. மண்டாடி என்பது இதுவரை காணாத ஒரு புதிய முயற்சியாகும். தயவுசெய்து இப்படத்தை சீனாவில் வெளியிடுங்கள். இது வெற்றி பெற்றால், 1,000 கோடி ரூபாய் வசூல் சாத்தியமாகும். இந்த வாய்ப்பை நாம் தவறவிடக் கூடாது. அந்தச் சாதனையைப் படைக்கும் முதல் படமாக மண்டாடி இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்து இருந்தார்.
Also Read… துல்கர் சல்மானின் ஐ அம் கேம் படத்தின் கதை இதுதானா? வைரலாகும் தகவல்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Sathyaraj at #Mandaadi Event ⭐:
“Aamir Khan’s #Dangal, #3Idiots and Salman Khan’s films are releasing in 5,000 screens in China.. If it runs for one week, it’ll easily do 1000 Cr..🔥 #Sivakarthikeyan‘s #Kanaa also released there.. Mandaadi is a never-m seen before attempt..…
— Laxmi Kanth (@iammoviebuff007) August 28, 2026
Also Read… பிரித்விராஜ் சுகுமாரின் டாய்ரா படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ