AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மீண்டும் இணையும் நானி – கீர்த்தி சுரேஷ் காம்போ.. தி பாரடைஸ் பட சிறப்புப் பாடலில் நடனமாடுவதை உறுதி செய்த கீர்த்தி சுரேஷ்!

Keerthy Suresh And Nani Combo: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் பல படங்கள் வெளியாகிவருகிறது. அந்த விதத்தில், நானியுடன் மீண்டும் பணியாற்றுவதை கீர்த்தி சுரேஷ் உறுதி செய்துள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

மீண்டும் இணையும் நானி – கீர்த்தி சுரேஷ் காம்போ.. தி பாரடைஸ் பட சிறப்புப் பாடலில்  நடனமாடுவதை உறுதி செய்த கீர்த்தி சுரேஷ்!
கீர்த்தி சுரேஷ் மற்றும் நானிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 28 Aug 2026 11:58 AM IST

மலையாளம் சினிமாவின் மூலமாக நாயகியாக அறிமுகமாகி, தற்போது உச்ச நட்சத்திர நடிகைகளில் ஒருவராக இருந்தவருபவர் கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh). இவரின் நடிப்பில், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் தொடர்ந்து படங்கள் வெளியாகிவருகிறது. அந்த விதத்தில் இவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுக்கு (Vijay Deverakonda) ஜோடியாக ரௌடி ஜனார்தனா (Rowdy Janardhana) மற்றும் தமிழில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், டோரதி (Dorothy) போன்ற திரைப்படங்களில் நாயகியாக நடித்துவருகிறார். அதிலும் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்துவரும் ரௌடி ஜனார்தனா படத்தில் மிகவும் வித்தியாசமான வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறாராம். இதையடுத்து நானியுடன் (Nani) முக்கியமான பட ஒன்றில் நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்திருக்கிறார்.

அது வேறெதுவும் இல்ல, இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் உருவாகிவரும் தி பாரடைஸ் (The Paradise) திரைப்படத்தில்தான். இந்த படத்தில் நானியுடன், கீர்த்தி சுரேஷ் சிறப்பு பாடல் ஒன்றில் நடனமாடுகிறாராம். இதை அதிகாரப்பூர்வமாக அவரே அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சூர்யாவின் 49-வது படத்தை இயக்கும் துல்கர் சல்மான் பட இயக்குநர்? வைரலாகும் தகவல்

நானியுடன் மீண்டும் இணைந்த கீர்த்தி சுரேஷ்:

நடிகை கீர்த்தி சுரேஷ், நானிக்கு ஜோடியாக ஏற்கனவே தசரா என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படமானது கடந்த 2023ம் ஆண்டில் வெளியான இந்த படம் இவருக்கு பெரும் வரவேற்பை கொடுத்திருந்தது. இப்படத்தையும் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கியிருந்த நிலையில், வெற்றி திரைப்படமாக அமைந்தது. தற்போது மீண்டும் இந்த கூட்டணியில் உருவாகியுள்ள புது படம்தான் தி பாரடைஸ். இதில் நானி ஹீரோவாக நடிக்க, நடிகை கயாடு லோஹர் இணைந்து நடித்துள்ளார்.

இதையும் படிங்க: ரம்யா கிருஷ்ணனுக்கு பதிலாக நானே.. அலா பொலேலோ பாடலில் ரஜினியுடன் பணியாற்றியது தருணம் – பூர்ணா பகிர்ந்த விஷயம்!

மேலும் கீர்த்தி சுரேஷ், தி பாரடைஸ் படத்தின் 2வது பாடலான யேஷா நாகுலா என்ற பாடலில் நானியுடன் சிறப்பு நடனமாடியுள்ளார். இதுவரை நடிகை கீர்த்தி சுரேஷ், கதாநாயகியாக நடிக்காத எந்த படங்களிலும் சிறப்பு நடனமாடியதில்லை, அந்த விதத்தில் தி பாரடைஸ் படத்தில் மட்டும்தான் இவ்வாறு சிறப்பு நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நானியுடன் தி பாரடைஸ் படத்தில் நடனமாடுவது குறித்து பதிவை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்:

நானியின் தி பாரடைஸ் படமானது அதிரடி மற்றும் ஆக்ஷன் கதைங்கலம் கொண்ட படமாக உருவாகியுள்ளதாம். இப்படம் சிறப்பான கதையில் உருவாகியிருக்கும் நிலையில், வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us