AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Jason Sanjay: அப்போதே நான் இயக்குநர் ஆகவேண்டும் என முடிவெடுத்துவிட்டேன் – ஜேசன் சஞ்சய்!

Jason Sanjay on his desire to direct: தமிழ் சினிமாவில் இளம் இயக்குநராக ரசிகர்களை ஈர்த்துவருபவர் ஜேசன் சஞ்சய். இவரின் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகியுள்ள படம் சிக்மா. அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், தனக்கு இயக்குநராக வேண்டும் என்ற ஆசை எப்போது வந்தது என தெரிவித்துள்ளார்.

Jason Sanjay: அப்போதே நான் இயக்குநர் ஆகவேண்டும் என முடிவெடுத்துவிட்டேன் – ஜேசன் சஞ்சய்!
ஜேசன் சஞ்சய்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 27 Aug 2026 21:29 PM IST

தென்னிந்திய மொழி சினிமாவில் உச்ச நயாகனாக இருந்துவந்தவர் முதல்வர் விஜய் (CM Vijay). இவர் தற்போது முழுமையாக தமிழக அரசியலில் இறங்கிவிட்டார். தற்போது முதலமைச்சராக பணியாற்றிவரும் நிலையில், சினிமாவிலிருந்து முழுமையாக விலகிவிட்டார். அந்த விதத்தில், இவரின் மூத்த மகன் ஜேசன் சஞ்சய் (Jason Sanjay) தற்போது சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் சுபாஷ்கரன் தயாரிக்கும், சிக்மா (Sigma) இவரை படத்தை ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சந்தீப் கிஷன் (Sundeep kishan) ஹீரோவாக நடிக்க, தெலுங்கு நடிகை ஃபரியா அப்துல்லா நாயகியாக நடித்துள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி படமாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இசையமைப்பாளர் தமன் எஸ் (Thaman S)இசையமைத்துள்ளார். இவரின் இசையில் இதுவரை மொத்தமாக 2 பாடல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இப்படமானது வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது.

அதை முன்னிட்டு படத்தின் புரோமோஷன் பணிகளும் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. சமீபத்தில் செய்தி நேர்காணல் ஒன்றில் பேசிய ஜேசன் சஞ்சய், அதில் தான் இயக்குநராகவேண்டும் என்பதை எப்போது முடிவு செய்தார் என்பது குறித்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: லூசர்… துல்கர் சல்மானின் ஐஆம் கேம் பட செகண்ட் சிங்கிள் வெளியீடு!

இயக்குநராகவேண்டும் என்ற ஆசை குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்:

அந்த செய்தி நேர்காணலில் பேசிய ஜேசன் சஞ்சய் அதில், “எனக்கு 18 அல்லது 19 வயதில் கதை சொல்லும் ஆர்வம் வந்தது என்று நினைக்கிறேன். அது நான் எழுதிய கதையாக இருந்தாலும் சரி அல்லது மக்கள் பகிர்ந்து கொள்ளும் நிஜ வாழ்க்கை சம்பவங்களாக இருந்தாலும் சரி, நான் எப்போதும் கதை சொல்வதில் ஆர்வமாக இருந்தேன். பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, நான் இயக்குநராக வேண்டும் என்று முடிவு செய்தேன். அது அங்குதான் தொடங்கியது” என அந்த செய்தி நேர்காணலில் அவர் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: மச்சான் பேரு மதுர நீ நின்னு பாரு எதிர – 22 ஆண்டுகளைக் கடந்தது தளபதி விஜயின் மதுர படம்… கொண்டாடும் ரசிகர்கள்

சிக்மா திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து ஜேசன் சஞ்சய் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

சிக்மா படமானது அதிரடி ஆக்ஷன் மற்றும் பண கடத்தல் தொடர்பான ஒரு வித்தியாசமான படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் மூலம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக நுழையும் நிலையில், எவ்வாறு இருக்கும் என் தளபதியின் ரசிகர்களும் எதிர்பார்த்திருக்கிறார்கள். இன்னும் இப்படத்தின் வெளியீட்டிற்கு ஒரு மாதத்திற்கும் மேல் இருக்கும் நிலையில், விளம்பரப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

Follow Us