AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

லூசர்… துல்கர் சல்மானின் ஐஆம் கேம் பட செகண்ட் சிங்கிள் வெளியீடு!

Im Game Movie Loser Song: மலையாளம் சினிமாவில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பின், துல்கர் சல்மானின் நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் ஐஆம் கேம். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள நிலையில், லூசர் என்ற 2வது பாடலை வெளியிட்ட படக்குழு. தற்போது இது இணையத்தில் வைரலாகிவருகிறது.

லூசர்… துல்கர் சல்மானின் ஐஆம் கேம் பட செகண்ட் சிங்கிள் வெளியீடு!
லூசர் பாடல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 27 Aug 2026 19:06 PM IST

தென்னிந்திய திரையுலகில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்தவருபவர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இந்த வரிசையில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பின், துல்கர் சல்மான் மலையாளத்தில் நடித்திருக்கும் படம்தான் ஐஆம் கேம் (Im Game). இதை மலையாள இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் (Nahas Hidhayath) இயக்க, துல்கர் சல்மானின் வேஃபரர் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனமானது தயாரித்துள்ளது. இந்த படத்தில் துல்கர் சல்மான் நாயகனாக நடிக்க, அவருடன் கயாடு லோஹர் (Kayadu Lohar), சம்யுக்தா விஸ்வநாத் போன்ற நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது கேம்ப்ளிங் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த படத்திற்கு மலையாள இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க, பாடல்கள் சிறப்பாக உருவாகியுள்ளது. ஏற்கனவே முதல் பாடல் வெளியான நிலையில், தற்போது “லூசர்” (Loser Song)  என்ற 2வது பாடலானது வெளியாகியுள்ளது. இந்த பாடலானது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: சூரியின் பர்த்டே.. மண்டாடி படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் போஸ்டர்!

ஐஆம் கேம் திரைப்படத்தின் லூசர் பாடல் குறித்து துல்கர் சல்மான் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

துல்கர் சல்மானின் ஐஆம் கேம் பட சென்சார் அப்டேட்:

துல்கர் சல்மானின் ஐஆம் கேம் படமானது சூதாட்டம் தொடர்பான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படமானது அதிரடி ஆக்ஷன், காதல் மற்றும் சூதாட்டம் போன்ற கதைகளை உள்ளடக்கியது. இதில் நடிகர்கள் கயாடு லோஹர், ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், சம்யுக்தா மேனன், கதிர், ஜெயசுதா போன்ற நடிகர்கள் நடித்துள்ளார். மேலும் நஸ்லென் மற்றும் ஆசிப் அலி போன்ற நடிகர்கள் கேமியோ வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கேஜிஎஃப் 2 பட முதல் நாள் வசூலை முந்தியதா யாஷின் டாக்ஸிக்? விவரங்கள் இதோ!

இப்படமானது ஆரம்பத்தில் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதியில் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், பின் சில காரணங்களால் தேதி மாற்றப்பட்டிருந்தது. இதையடுத்து 2026ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியானது. அந்த வகையில், இப்படத்திற்கு சென்சார் குழு யு/ஏ தரச் சான்றிதழ் வழங்கியுள்ளது. அந்த வகையில், இப்படத்தை 16 வயதிற்கு மேற்பட்டோர் திரையரங்குகளில் பார்க்கலாம்.

Follow Us