AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஐ நோபடினு வச்சதுக்கு பதிலா ட்விஸ்ட்னு வச்சு இருக்கலாம்… ஓடிடி விமர்சனம் இதோ

I Nobody movie OTT Update | நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் முன்னதாக மலையாள சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றப் படம் ஐ நோபடி. இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில் படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

ஐ நோபடினு வச்சதுக்கு பதிலா ட்விஸ்ட்னு வச்சு இருக்கலாம்… ஓடிடி விமர்சனம் இதோ
ஐ நோபடிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Aug 2026 19:48 PM IST

மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் கடந்த ஜூலை மாதம் 09-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ஐ நோபடி. இயக்குநர் நிஷாம் பஷீர் இந்தப் படத்தினை இயக்கி இருந்தார். ஹீய்ஸ்ட் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி இருந்த இந்தப் படத்தில் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரனுக்கு ஜோடியாக நடிகை பார்வதி திருவோத்து நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் இந்த ஐ நோபடி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி நடிகர்கள் ஹக்கிம் ஷாஜகான், அசோகன், விஜயராகவன், மதுபால், ஷங்கர் ராமகிருஷ்ணன், நக்ஷத்ரா சி எம், அய்ரா இஸ்ரா, நிஷாந்த் சாகர், நந்து, ஜிஜோய் ராஜகோபால், காலித் ரஹ்மான், சஞ்சு சிவராம், சுதி கொப்பா, பீனா ஆர். சந்திரன், சனா அல்தாஃப், கிருஷ்ணன் பாலகிருஷ்ணன், சனா அல்தாஃப், சுதி அலி, கிருஷ்ணன் பாலகிருஷ்ணன், நௌஷாத் அலி, சுதி அலி, நௌஷாத் அலி, மகேந்திரன், ஆல்பின் அலெக்ஸ், ஜித்தின் மதனன், லெனா பால், ரோனி டேவிட் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

ஐ நோபடி படத்தின் கதை என்ன?

படத்தின் தொடக்கத்திலேயே நடிகர் பிரித்விராஜ் ஒரு வங்கி உள்ளே செல்கிறார். அவரைத் தொடர்ந்து முகமூடி அணிந்த மூன்று கொள்ளையர்கள் வங்கியை கொள்ளை அடிக்க செல்கிறார்கள். அவர்கள் வங்கியைவிட்டு திரும்பிவரும் போது பிரித்விராஜை பணைய கைதியாக கொண்டு வருகிறார்கள். மேலும் பணத்தை கொள்ளை அடித்துவிட்டு தப்பி செல்லும் போது பிரித்விராஜை ஒரு ஹைவேயில் விட்டுவிட்டு அந்த மூன்று நபர்களும் தப்பிக்க முயற்சிக்கிறார்கள். அந்த சமயத்தில் அவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளாகி மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழக்கின்றனர்.

Also Read… தனது படத்தையே ட்ரோல் செய்து பேசிய விக்னேஷ் சிவன் – வைரலாகும் வீடியோ

அதனைத் தொடர்ந்து அவர்கள் சென்ற காரை பரிசோதித்த போது வங்கியில் கொள்ளை அடித்த பணம் அதில் இல்லை. இதனால் காவல்துறையும் பொது மக்களும் பிரித்விராஜிடம் தான் அந்த பணம் இருப்பதாக நினைத்து அவரையும் அவரது குடும்பத்தையும் தொடர்ந்து சிரமத்திற்கு ஆளாக்குகிறார்கள். இப்படியான சூழ்நிலையில் இருந்து குடும்பத்தையும் தன்னையும் பிரித்விராஜ் எப்படி காப்பாற்றிக் கொள்கிறார் என்பதே இந்த ஐ நோபடி படத்தின் கதை ஆகும்.

பல ட்விஸ்ட்கள் நிறைந்த இந்தப் படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தியேட்டரில் மிஸ் செய்தவர்கள் ஓடிடியில் மிஸ் செய்யாமல் பாருங்க.

Also Read… அஜித் குமாரின் டேர் டெவில் படத்திலிருந்து விலகிய ஸ்ரீலீலா? வைரலாகும் தகவல்

Follow Us