AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரவி மோகனின் அடுத்தப் படத்தை இயக்கும் பிரபல மலையாள இயக்குநர்? வைரலாகும் தகவல்

Ravi Mohans next movie update viral on social media | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரவி மோகன். இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ரவி மோகனின் அடுத்தப் படத்தை இயக்கும் பிரபல மலையாள இயக்குநர்? வைரலாகும் தகவல்
ரவி மோகன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Aug 2026 19:23 PM IST

மலையாள சினிமாவில் கடந்த 2022-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் மாலிக்கப்புரம். இந்தப் படத்தினை இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் உன்னி முகுந்தன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் தேவா நந்தா, ஸ்ரீபத், சைஜு குருப்,
ஆல்பி பஞ்சிகரன், சம்பத் ராம், ரமேஷ் பிஷாரடி, அபிலாஷ் பிள்ளை, மனோஜ் கே. ஜெயன், ரெஞ்சி பணிக்கர், மனோஹரி ஜாய், டி.ஜி. ரவி, ஸ்ரீஜித் ரவி, அஜய் வாசுதேவ், துஷாரா பிள்ளை, கலாபவன் ஜிண்டோ மற்றும் அஸ்வதி அபிலாஷ் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

இந்தப் படத்தில் இரண்டு குழந்தைகள் ஐயப்பன் கோவிலுக்கு மாலையிட்டு வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லாமல் தனியாக மலைக்கு செல்கிறார்கள். அவர்களுக்கு ஏற்படும் துன்பத்தில் இருந்து காவல்துறை அதிகாரி ஒருவர் காப்பாற்றுகிறார். அவரை ஐயப்பன் என அந்த சிறுவர்கள் நினைக்கிறார்கள். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்க உள்ள படம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ரவி மோகனின் அடுத்தப் படத்தை இயக்கும் பிரபல மலையாள இயக்குநர்?

ஜெயம் ரவியின் அடுத்த படத்தை ‘மாளிகைப்புரம்’ திரைப்படத்தின் இயக்குனர் விஷ்ணு சசி சங்கர் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் அவர் ஐயப்ப பக்தராக நடிக்கவுள்ளார்; இதில் சபரிமலை யாத்திரையின் சிறப்பம்சமான ‘பள்ளிக்கட்டு’ தொடர்பான பாடல் காட்சியும் இடம்பெறவுள்ளது. இப்படத்தை ஜே.கே. சரவணன் தயாரிக்க, வெங்கட் பிரபு நிர்வாகத் தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார். ஐயப்ப வழிபாட்டுக்கு உகந்த காலக்கட்டத்தில் (சீசனில்) இப்படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது என்று செய்திகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… கேங்ஸ்டராக மக்களின் மனதில் இடம் பிடித்தாரா யாஷ்? டாக்ஸிக் படத்தின் எக்ஸ் விமர்சனம் இதோ

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… இறுதியாக வெய்டிங் இஸ் ஓவர்… தொடங்கியது ஒன்ஸ்மோர் படத்தின் டிக்கெட் புக்கிங்!

Follow Us