AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அரசன் பட ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த இசையமைப்பாளர் அனிருத்

Anirudh's Surprise Visit To Arasan Shooting Spot | பான் இந்திய மொழிகளில் பிரபல இசையமைப்பாளராக வலம் வரும் இசையமைப்பாளர் அனிருத் நடிகர் சிலம்பரசனின் அரசன் பட ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சர்ப்ரைஸாக சென்ற வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

அரசன் பட ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த இசையமைப்பாளர் அனிருத்
அரசன் படக்குழுImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Aug 2026 13:56 PM IST

தமிழ் சினிமாவில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் அரசன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இயக்குநர் வெற்றிமாறன் இந்த அரசன் படத்தை எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. மேலும் இந்த வீடியோவைப் பார்க்கும் போது வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான வட சென்னை படத்தின் கதைக்கும் இந்த கதைக்கும் ஒரு கனெக்‌ஷன் இருப்பது வெளிப்படையாக தெரிந்தது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் சிலம்பரசன் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் நடிகர் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த அரசன் படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த 9 மாதங்களாக தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது. இந்த படத்தின் பணிகள் முடிவடைந்து இந்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதே வேலையில் படம் வருகின்ற 2027-ம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாக வாய்ப்பு உள்ளது என்றும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

அரசன் பட ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த அனிருத்:

இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து வருகிறார். மேலும் இந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் சர்ப்ரைஸாக விசிட் தந்துள்ளார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படத்தை தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தாணு தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ரவி தேஜாவின் இருமுடி படத்தினை பாராட்டிய விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா தம்பதி

அரசன் பட தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தாணு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… மஞ்சள் வெயில் மாலையிலே மெல்ல மெல்ல இருளுதே… 20 ஆண்டுகளைக் கடந்தது வேட்டையாடு விளையாடு படம்

Follow Us