AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மஞ்சள் வெயில் மாலையிலே மெல்ல மெல்ல இருளுதே… 20 ஆண்டுகளைக் கடந்தது வேட்டையாடு விளையாடு படம்

20 Years Of Vettaiyaadu Vilaiyaadu Movie | உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் முன்னதாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் வேட்டையாடு விளையாடு. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

மஞ்சள் வெயில் மாலையிலே மெல்ல மெல்ல இருளுதே… 20 ஆண்டுகளைக் கடந்தது வேட்டையாடு விளையாடு படம்
வேட்டையாடு விளையாடு படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Aug 2026 16:13 PM IST

தமிழ் சினிமவில் நாயகனாக மட்டும் இன்றி பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருபவர் நடிகர் கமல் ஹாசன். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளில் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தொடர்ந்து உலக நாயகன் கமல் ஹாசன் பல வேடங்களில் சினிமாவில் நடித்து உள்ளார். அவர் அந்த வேடங்களில் நடித்து இருந்தார் என்று கூறுவதைவிட அவர் அந்த கதாப்பாத்திரமாக வாழ்ந்து இருந்தார் என்றே கூறவேண்டும். அப்படி ஒவ்வொரு படத்திலும் தனக்கு கொடுக்கப்படும் கதாப்பாத்திரத்தை மிகவும் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார் நடிகர் கமல் ஹாசன்.

இந்த நிலையில் நடிகர் கமல் ஹாசன் முன்னதாக நடித்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் வேட்டையாடு விளையாடு. காவல்துறை அதிகாரியாக நடிகர் கமல் ஹாசன் கலக்கி இருக்கும் இந்தப் படம் கடந்த 2006-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

20 ஆண்டுகளைக் கடந்தது வேட்டையாடு விளையாடு படம்:

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி இயக்கிய இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசன் உடன் இணைந்து நடிகர்கள் ஜோதிகா, கமாலினி முகர்ஜி, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி மற்றும் சலீம் பைக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு ஓரினச்சேர்க்கை குறித்த விவரம் அதிக அளவில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் 20 ஆண்டினை நிறைவு செய்ததை படக்குழு தற்போது கொண்டாடி வருகின்றது.

Also Read… பூஜையுடன் தொடங்கிய ஜி.வி.பிரகாஷ் குமாரின் நிஞ்சா பட ஷூட்டிங் – வைரலாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… இரும்புத்திரை படத்தின் கதையை அர்ஜுன் சார் கேட்கவே மறுத்துவிட்டார் – பி.எஸ்.மித்திரன்

Follow Us