AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

துல்கர் சல்மானின் ஐ அம் கேம் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? அப்டேட் இதோ

I am Game Movie | நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஐ அம் கேம். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

துல்கர் சல்மானின் ஐ அம் கேம் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? அப்டேட் இதோ
ஐ அம் கேம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Aug 2026 11:48 AM IST

மலையாள சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் நடிகர் துல்கர் சல்மான் அவ்வபோது மற்ற மொழிப் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். தொடர்ந்து நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் எந்த மொழியில் படம் திரையரங்குகளில் வெளியானாலும் அந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம்  ஐ அம் கேம். இந்தப் படம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே திரையரங்குகளில் ஓணம் ஸ்பெஷலாக வெளியாக வேண்டியது. ஆனால் போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் நிறைவடையாக காரணத்தால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 03-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

துல்கர் சல்மானின் ஐ அம் கேம் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது:

முன்னதாக ஐ அம் கேம் படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி எப்போது நடைபெறும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி வருகின்ற 29-ம் தேதி ஆஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு ஐ அம் கேம் படத்தில் இசை வெளியீட்டு விழா மற்றும் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி கின்ஃப்ரா சர்வதேச கண்காட்சி மையம், காக்கநாடுவில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… திரையரங்குகளில் 100 நாட்களைக் கடந்தது கருப்பு படம் – கொண்டாட்டத்தில் படக்குழு

ஐ அம் கேம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… டாக்ஸிக் பட விழாவில் நடந்த விபத்து… மாணவர்களுக்கு காயம்

Follow Us