AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மெகா ஸ்டார் சிரஞ்சீவி பர்த்டே ஸ்பெஷல்… 158-வது படத்தின் டைட்டில் க்ளிம்ஸ் வீடியோவை வெளியிட்ட படக்குழு

KAAKA Title Glimpse | தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சிரஞ்சீவி. இவர் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது நடிப்பில் 158-வது படமாக உருவாகி வரும் படத்தின் டைட்டில் க்ளிம்ஸ் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

மெகா ஸ்டார் சிரஞ்சீவி பர்த்டே ஸ்பெஷல்… 158-வது படத்தின் டைட்டில் க்ளிம்ஸ் வீடியோவை வெளியிட்ட படக்குழு
காகImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Aug 2026 11:37 AM IST

தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சிரஞ்சீவி. இவர் தனது சினிமா வாழ்க்கையை கடந்த 1978-ம் ஆண்டு முதல் தெலுங்கு சினிமாவில் தொடங்கி தற்போது 48 ஆண்டுகளாக தொடர்ந்து சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்து உள்ளார். உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் சிரஞ்சீவி தொடர்ந்து 70 வயதைக் கடந்தும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் தற்போதும் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் 157-வது படமாக இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் மன ஷங்கர வர பிரசாத் காரு. இந்தப் படம் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு வெளியானது.

படம் திரையரங்குகளில் வெளியான போது விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சிரஞ்சீவி தனது 158-வது படத்திற்காக இயக்குநர் பாபி கொல்லி உடன் கூட்டணி வைத்தார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடெக்‌ஷன் சார்பாக தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணன் தயாரித்து வருகிறார்.

படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்று நடிகர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது 71-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அதனை சிறப்பிக்கும் விதமாக படக்குழு அவரது நடிப்பில் 158-வது படமாக உருவாகி வரும் படத்தின் டைட்டில் க்ளிம்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது. அதன்படி படத்தின் காக என்று பெயர் வைத்துள்ளனர். மேலும் இந்தப் படத்தில் நடிகர் சிரஞ்சீவி உடன் இணைந்து நடிகர்கள் அனஸ்வர ராஜன், நிவேதா பெத்துராஜ், சுனில், கெட்அப் ஸ்ரீனு உட்பட நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… தர்மன் படத்தில் ரஜினிகாந்திற்கு வில்லனாகும் பிரபல தெலுங்கு நடிகர்? வைரலாகும் தகவல்

கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… அமெரிக்காவில் விஸ்வநாத் & சன்ஸ் படம் மொத்தம் வசூலித்தது இவ்வளவா? அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

Follow Us