விஜய் சேதுபதி – சாய் பல்லவி படத்தின் ஷூட்டிங் நிலவரம் என்ன? வைரலாகும் தகவல்
Vijay Sethupathi and Sai Pallavi movie update | இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடிகர்கள் சாய் பல்லவி மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் மணிரத்னம். இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாகவும் நடிகை சாய் பல்லவி நாயகியாகவும் நடித்து வருகிறார். நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் முன்னதாக வெளியான செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து இருந்தார். ஆனால் அந்தப் படத்தில் அவர் நாயகனாக நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுதான் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தென்னிந்திய மொழிகளில் பிரபல நாயகியாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. இவரது நடிப்பில் தொடர்ந்து படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வருகின்றது.
தென்னிந்திய சினிமாவில் பல இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்த நடிகை சாய் பல்லவி முதன்முறையாக இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி இணைந்து நடிக்கும் இந்தப் படத்தின் அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.




விஜய் சேதுபதி – சாய் பல்லவி படத்தின் ஷூட்டிங் நிலவரம் என்ன?
ரொமாண்டிக் காமெடி பாணியில் உருவாகி வரும் இந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது. இந்த நிலையில் தற்போது வெளியான தகவலின் படி கொல்கத்தாவில் நடைப்பெற்று வரும் இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் சில முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் படக்குழு தற்போது படத்தின் படப்பிடிப்பை சென்னையில் தொடங்கி உள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… Sreeleela: பணம், புகழை விட ரசிகர்களின் அன்புதான் எல்லாமே – ஸ்ரீலீலா பேச்சு!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
The shooting of #ManiRatnam’s film starring #VijaySethupathi and #SaiPallavi has completed a few scenes in Kolkata. The team has now begun shooting the film in Chennai. pic.twitter.com/WuIZqYsnIa
— Movie Tamil (@_MovieTamil) August 18, 2026
Also Read… Sai Abhyankkar: 6வது இண்டீ பாடல்.. சூப்பர் அப்டேட் கொடுத்த சாய் அபயங்கர்!