டோலிவுட் டூ கோலிவுட்.. இந்த போட்டோவில் இருக்கும் சிறுவன் யார் தெரிகிறதா?
Who is This Child Star?: சமூக ஊடகங்களின் வளர்ச்சிக்கு பின், சினிமாவின் மீதுள்ள ஆர்வமும் மக்கள் மத்தியில் அதிகமாகியது. அதிலிருந்து நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் வைரலாகிவரும். இந்நிலையில் இந்த போட்டோவில் அடையாலம் தெரியாமல் இருக்கும் இந்த சிறுவன் எந்த நடிகர்-னு தெரிகிறதா?, விவரமாக பார்க்கலாம்.
இணையதளங்களின் வளர்ச்சியின் காரணமாக சினிமாவின் மீது மக்களுக்கு அதிக ஆர்வம் இருந்துவருகிறது. திரைப்பட நடிகர்கள் மற்றும் நடிகைகளின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு, வைரலாகிவரும். அந்த விதத்தில் மேலே இருக்கும் புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யார் என தெரிகிறதா?. இவர் தமிழில் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) முதல் தனுஷ் (Dhanush) போன்ற பல்வேறு இயக்குநர்களின் இயக்கத்தில் படங்களில் நடித்திருப்பவர். இவரின் நடிப்பில், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் படங்கள் வெளியாகியிருக்கிறது. இவர் தெலுங்கு நடிகர் என்ற நிலையில், தெலுங்கில் அதிக படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழில் இயக்குநர் ஆர்.மாதவன் குமாரின் இயக்கத்தில் 2013ம் ஆண்டில் நாயகனாக நுழைந்தார்.
இதற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் என அடுத்தடுத்த இயக்குநர்களுடன் பணியாற்றியிருக்கிறார். இப்போது தமிழக முதல்வர் விஜய்யின் (CM Vijay), மூத்த மகன் ஜேசன் சஞ்சய் (Jason Sanjay) இயக்கத்திலும் இணைந்து நடித்திருக்கிறார். இப்போது இந்த சிறுவன் யார் என தெரிந்திருக்கும்.. அட இது வேறுயாருமில்லை நடிகர் சந்தீப் கிஷன்தான் (Sundeep Kishan).




இதையும் படிங்க: அப்போ நிவின் பாலி யாருனு தெரியாது? உண்மையை உடைத்த சாய் பல்லவி!
நடிகர் சந்தீப் கிஷனின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
View this post on Instagram
சந்தீப் கிஷனின் சினிமா வாழ்க்கை:
நடிகர் சந்தீப் கிஷன் 2010ம் ஆண்டில் தெலுங்கில் வெளியான சினேகா கீதம் என்ற படத்தின் மூலம் லீட் நாயகனாக அறிமுகமானார். அதற்கு முன் நடிகர் சர்வானந்த் நடித்திருந்த பிரஸ்தானம் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படங்களுக்கு பின் இந்தி மொழியிலும் நடிக்க தொடங்கியிருந்தார். அந்த வரிசையில் தமிழில் 20143ம் ஆண்டில் வெளியான யாருடா மகேஷ் என்ற படத்தின் மூலம் நாயகனாக நுழைந்தார். இந்த படம் அவருக்கு கலவையான விமர்சனங்களை கொடுத்த நிலையில், பின் லோகேஷ் கனகராஜின் மாநகரம் படத்திலும் நடித்திருந்தார். இதற்கு பின் நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன், கசட தபற, கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்துவந்தார்.
இதையும் படிங்க: பீக்கில் சூர்யா.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட 4வது நாள் வசூல் இத்தனை கோடியா? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
மேலும் தனுஷ் இயக்கத்திலும், நடிப்பிலும் வெளியான ராயன் படத்தில் அவரின் தம்பியாக நடித்திருந்தார். இது இவருக்கு மீண்டும் தமிழில் பிரபலத்தைக் கொடுத்தது. தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழியில் உருவாகியுள்ள சிக்மா படத்தில் நடித்திருக்கிறார். இதை முதல்வர் விஜய்யின் மகன், ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ளார். இது வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதியில் வெளியாகிறது. இதற்கு பின் பவர் பேட்ட மற்றும் வைப் போன்ற படங்களிலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.