AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Suriya: பீக்கில் சூர்யா.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட 4வது நாள் வசூல் இத்தனை கோடியா? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Vishwanath and Sons 4-day Collections: நடிகர் சூர்யாவின் 46வது திரைப்படமாக அறிவிக்கப்பட்டதுதான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி நேரடியாக தமிழில் இயக்கியிருந்த இப்படம், 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியானது. இப்படம் 4 நாட்களில் மொத்தம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Suriya: பீக்கில் சூர்யா.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட 4வது நாள் வசூல் இத்தனை கோடியா? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 18 Aug 2026 18:10 PM IST

தென்னிந்திய சினிமாவில் முன்னேறிவரும் பீக் நடிகராக இருப்பவர் தி ஒன் சூர்யா (The One Suriya). இவரின் நடிப்பில் 2026ம் ஆண்டில் 2வது வெளியாகியுள்ள திரைப்படம்தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath and Sons). இதை தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி (Venky Atluri) இயக்க, சித்தாரா என்டேர்டைமென்ட் நிறுவனத்தின் கீழ் நாக வம்சி தயாரித்திருந்தார். இது 2025ம் ஆண்டு மே மாதத்தில் சூர்யா46 என அறிவிக்கப்பட்டு, பூஜைகளுடன் பட ஷூட்டிங் தொடங்கப்பட்டது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். இவர்கள் இருவருக்குமே கிட்டத்தட்ட 23 வயது வித்தியாசம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது கடந்த 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.

அதிரடி ஆக்ஷ்சன், குடும்பம் மற்றும் காதல் போன்ற கதைக்களங்களை மையமாக கொண்டு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமானது வெளியாகி 2 நாட்களிலே சுமார் ரூ 100 கோடி வசூல் செய்திருந்த நிலையில், இன்றுடன் (18/8/2026) வெளியாகி 4 நாட்களை கடந்துள்ள நிலையில், இதுவரை உலகமெங்கும் எவ்வளவுக்கு வசூல் செய்துள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: நிஜமா நான் செஞ்ச பாவம் முழுசா உன் மேல விதைச்ச பாசம் – 4 ஆண்டுகளை நிறைவு செய்த திருச்சிற்றம்பலம் படம்!

4 நாட்களில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் வசூல் எவ்வளவு:

சூர்யா மற்றும் மமிதா பைஜூவின் காம்போவில் முதல் படமாக இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் வெளியாகியுள்ளது. இது முழுக்க முழுக்க பேமிலி பொழுதுபோக்கு கதைக்களத்தில் உருவாக்கப்பட்டிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் திரையரங்குகளை தெறிக்கவிட்டுவருகிறது. இந்த படம் வெளியாகி 4 நாட்களை கடந்துள்ள நிலையில், இதுவரை மொத்தமாக சுமார் ரூ 150 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: கவினை ஒரு சூப்பர் ஸ்டாராகப் பார்க்க விரும்புகிறேன் – நயன்தாரா!

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் 4வது வசூல் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமானது திரையரங்குகளில் பேமிலி ஆடியன்ஸை ஈர்த்துவருகிறது. இந்த படமானது சூர்யாவுக்கு 2026ம் ஆண்டில் 2வது வெற்றி படமாக அமைந்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைக்கும் நிலையில், பல வருடங்களுக்கு பின் சூர்யாவிற்கு ஒரே ஆண்டில் இரு வெற்றி படங்கள் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us