நிஜமா நான் செஞ்ச பாவம் முழுசா உன் மேல விதைச்ச பாசம் – 4 ஆண்டுகளை நிறைவு செய்த திருச்சிற்றம்பலம் படம்!
4 Years Of thiruchitrambalam Movie | நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் திருச்சிற்றம்பலம். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி 4 ஆண்டுகள் நிறைவடைந்ததை படக்குழு தற்போது சமூக வலைதளத்தில் போஸ்டர் வெளியிட்டு கொண்டாடி வருகின்றது.
தமிழ் சினிமாவில் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் திருச்சிற்றம்பலம். ரொமாண்டிக் காமெடி ட்ராமா பாணியில் உருவாகி இருந்த இந்தப் படத்தை இயக்குநர் மித்ரன் ஆர் ஜவகர் இயக்கி இருந்தார். மேலும் நடிகர் தனுஷ் இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது. படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகைகள் நித்யா மேனன், ராஷி கன்னா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நாயகிகளாக நடித்து இருந்தனர். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.
அதன்படி நடிகர்கள் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், வி ஜே பப்பு, ரேவதி, முனிஷ்காந்த், ஸ்டண்ட் சில்வா, ஸ்ரீரஞ்சனி, அறந்தாங்கி நிஷா, விக்ரம் ராஜா, ஏ. ரேவதி, மற்றும் மு.ராமசுவாமி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




4 ஆண்டுகளை நிறைவு செய்த திருச்சிற்றம்பலம் படம்:
ஒரு கார் விபத்தில் தனது அம்மா மற்றும் தங்கையை இழந்த தனுஷ் அந்த விபத்திற்கு காரணம் தனது தந்தை பிரகாஷ் ராஜ் என்று அவரிடம் பேசாமலே இருக்கிறார். தந்தை மீது இருந்த கோபத்தில் படிப்பை நிறுத்திவிட்டு ஃபுட் டெலிவரி செய்து வரும் அவருக்கு சிறு வயதில் இருந்தே உற்ற தோழியாக உள்ளார் நித்யா மேனன். தனுஷ் மீது பள்ளியில் படிக்கும் போதே காதலில் விழுந்த நடிகை நித்யா மேனன் தனுஷிடம் தோழியாக பல விசயங்களை செய்து வருகிறார்.
பல ஆண்டுகளாக தனுஷிற்கு நித்யா மேனனின் காதலே புரியாமல் மற்ற பெண்கள் மீது வரும் காதலை நித்யா மேனனிடமே உதவி கேட்கிறார். இப்படி இருக்கும் சூழலில் இறுதியாக நித்யா மேனன் காதல் தனுஷிற்கு புரிந்ததா இல்லையா என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகலில் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
Also Read… நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த கோலமாவு கோகிலா படம் 8 ஆண்டுகளை நிறைவு செய்தது
திருச்சிற்றம்பலம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Celebrating 4 Years of the wholesome entertainer #Thiruchitrambalam 💛#4YearsofThiruchitrambalam@dhanushkraja @anirudhofficial #Bharathiraja @prakashraaj @MithranRJawahar @priya_Bshankar #NithyaMenen #RaashiiKhanna pic.twitter.com/N3zJz2ffpD
— Sun Pictures (@sunpictures) August 18, 2026
Also Read… இது பிக் பாஸ் காமன் மேன் ஷோவா? இல்ல வேற எதுவுமா?- இணையத்தில் கொந்தளிக்கும் மக்கள்!