நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த கோலமாவு கோகிலா படம் 8 ஆண்டுகளை நிறைவு செய்தது
8 Years Of Kolamaavu Kokila | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் நெல்சன் திலீப் குமார். இவரது இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா படம் திரையரங்குகளில் வெளியான படம் இன்றுடன் 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் நாயகன்களுக்கு ஜோடியாக நடித்து வந்த நடிகை நயன்தாரா கடந்த சில ஆண்டுகளாக நாயகியை மையமாக வைத்து உருவாகும் படங்களில் நடித்து வருகிறார். அப்படி நடிகை நயன்தாரா நாயகியை முன்னிலையில் வைத்து உருவாகும் படங்களில் நடிக்க தொடக்க காரணமாக அமைந்தது கோலமாவு கோகிலா படம். இந்தப் படம் கடந்த 17-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2018-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. டார்க் காமெடி பாணியில் வெளியான இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்த கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலமாகவே அவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோலமாவு கோகிலா படத்தில் நடிகை நயன்தாரா நாயகியாக நடித்து இருந்த நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், சரவணன், ஆர்.எஸ். சிவாஜி, ஜாக்குலின் லிடியா, சார்லஸ் வினோத், ஹரீஷ் பெராடி, ராஜேந்திரன், அன்பு தாசன், சீனு மோகன், அறந்தாங்கி நிஷா, ரெடின் கிங்ஸ்லி, வடிவேல் பாலாஜி, அருண் அலெக்சாண்டர் மற்றும் பில்லி முரளி என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.
Also Read… மலையாள சினிமாவில் உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து வெளியான உயிர் படம் – எப்படி இருக்கு?




கோலமாவு கோகிலா படம் 8 ஆண்டுகளை நிறைவு செய்தது:
இந்தப் படத்தில் கோலமாவு என்று நடிகை நயன்தாரா மற்றும் அவரது குடும்பத்தினர் போதை மருந்தை விற்பனை செய்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இந்த எந்த விசயமும் தெரியாத மளிகைக் கடை ஓனர் யோகி பாபு நயன்தாராவை காதலிக்கிறார். இதனால் என்ன எல்லாம் நடக்கிறது யோகி பாபுவின் வாழ்க்கை மற்றும் நயன்தாராவின் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறியது எனப்தே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.
Also Read… 80வது சுதந்திர தின விழா.. கார்த்தியின் சர்தார் 2 படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் போஸ்டர்!