Rajinikanth: சினிமாவில் 51வது வருடத்தில் சூப்பர் ஸ்டார்… ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்ட தர்மன் படக்குழு!
Rajinikanth 51 Years Cinema: தென்னிந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 50 வருடங்களை கடந்து, 51வது வருடத்திலும் நாயகனாக நடித்துவருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது சினிமாவில் 51வது வருடத்தில் அடியெடுத்துவைக்கும் நிலையில், இது தொடர்பான ஸ்பெஷல் வீடியோவை தர்மன் படக்குழு வெளியிட்டுள்ளது.
பான் இந்திய நடிகர்களால் சூப்பர் ஸ்டார் (Superstar) என்று அழைக்கப்பட்டுவருபவர் ரஜினிகாந்த் (Rajinikanth). இவர் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் என பல்வேறு மொழி படங்களிலும் பணியாற்றியுள்ளார். இவரின் நடிப்பில் இதுவரை மொத்தமாக 171 திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. இறுதியாக இவரின் நடிப்பில் கூலி (Coolie) என்ற திரைப்படம் வெளியாகி சிறப்பான வரவேற்பைப் பெற்றிருந்தது. இதற்கு கலவையான விமர்சனங்கள் இருந்திருந்தாலும், வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருந்தது. இந்த திரைப்படத்திற்கு பின் ஜெயிலர் 2 (Jailer 2) மற்றும் தர்மன் (Dharman) போன்ற படங்களிலும் ஒப்பந்தமாகியிருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் கே.பாலச்சந்தரின் (K. Balachander) இயக்கத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். இந்த அபூர்வ ராகங்கள் என்ற இந்த படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இப்படத்தில் கமல்ஹாசன் (Kamal Haasan) மற்றும் ஸ்ரீவித்யாவுடன் (Srividhya) ரஜினி நடித்திருந்தார்.
இந்த படமானது வெளியாகி இன்றுடன் (15/08/2026) கிட்டத்தட்ட 51 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அந்த விதத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் சினிமாவில் நுழைந்து 51வது வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இது தொடர்பான ஸ்பெஷல் வீடியோவை தர்மன் படக்குழு பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: ஒவ்வொரு மூச்சிலும் சுதந்திரம்… ஒவ்வொரு இதயத்திலும் பெருமிதம்… ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட தர்மன் படக்குழு
சினிமாவில் ரஜினிகாந்த் நுழைந்து 51வது வருடத்தை கடந்துள்ளது பற்றி தர்மன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் வீடியோ பதிவு:
51 Years
The Style
The Swag
The Superstar 🔥🔥#Dharman #KettaPaiyanSir #SuperstarRajinikanth #KamalHaasan @rajinikanth @ikamalhaasan #Mahendran @Dir_Ashwath @anirudhofficial @anbariv @iYogiBabu @SimranbaggaOffc #RaashiKhanna @nikethbommi #KarthikRajkumar @PradeepERagav… pic.twitter.com/48TVAf0F80— Turmeric Media (@turmericmediaTM) August 15, 2026
ரஜினிகாந்தின் புதிய திரைப்படங்கள்:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 51 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இன்றுவரையிலும் இவர் சினிமாவில் நாயகனாகவே நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இந்த 2026ம் ஆண்டில் வெளியாக காத்திருக்கும் திரைப்படம் ஜெயிலர் 2. இதை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்க, சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் 2026ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படமானது 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் 1 படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பந்தம் என்ன சொந்தம் என்ன… வழி தவறிய மம்முட்டிக்கு உதவிய நபர் – வைரலாகும் வீடியோ
இந்த படத்திற்கு பின் கமல்ஹாசனின் தயாரிப்பில் முதல் முறையாக இணைந்துள்ள படம் தர்மன். இதை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்க, அனிருத் இசையமைக்கிறார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் சிறப்பாக நடைபெறுகிறது. இதில் சிம்ரன் மற்றும் ராஷி கண்ணா போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துவருகிறார்கள். இப்படம் 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.