பந்தம் என்ன சொந்தம் என்ன… வழி தவறிய மம்முட்டிக்கு உதவிய நபர் – வைரலாகும் வீடியோ
Mammootty Video Viral On Social Media | மலையாள சினிமாவில் உச்ச நாயகனாக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. இவர் தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் பிசியான நாயகனாக வலம் வரும் நிலையில் சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
மலையாள சினிமாவில் உச்ச நாயகனாக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. இவர் 75 வயதைக் கடந்து தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் தற்போது பிசியாக படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து நடிகர் மம்முட்டி நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. தற்போது தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்கும் ஓம் படத்தில் நடிகர் மம்முட்டி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அதுமட்டும் இன்றி மலையாள மொழியில் அவர் நாயகனாக நடித்து தனது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிக்கும் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் நடிகர் மம்முட்டி. தொடர்ந்து நடிகர் மம்முட்டி நடிப்பில் உருவாகும் படங்கள் தொடர்பான அப்டேட்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இந்த நிலையில் நடிகர் மம்முட்டி சமீபத்தில் தமிழ் நாட்டில் தனது படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கேரளாவிற்கு செல்லும் வழியில் வழிதவறி சுற்றித் திரிந்த போது அந்த பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வழிகாட்டிக் கூட்டிச் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
வழி தவறிய மம்முட்டிக்கு உதவிய நபர் – வைரலாகும் வீடியோ:
அதன்படி அந்த வீடியோவில் காருக்குள் இருந்து முன்பு அந்த நபர் பைக் ஓட்டி செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் நடிகர் மம்முட்டி ரஜினிகாந்த் உடன் இணைந்து தமிழ் சினிமாவில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடித்து வெளியான தளபதி படத்தில் வரும் காட்டுக் குயில் என்ற பாடலில் இருந்து பந்தம் என்ன சொந்தம் என்ன பாடல் வரிகளை மம்முட்டி பாடுகிறார். அதனைத் தொடர்ந்து வழிகாட்டிய நபருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் போது இது என் ஃப்ரண்ட் என்று மம்முட்டி சொல்லுகிறார். அந்த வீடியோ தற்போது இணையத்ஹ்டில் வைரலாகி வருகின்றது.
Also Read… விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட ரிலீஸ்.. திருப்பதியில் மொட்டையடித்த இயக்குநர் வெங்கி அட்லூரி!
இணையத்தில் வைரலாகும் மம்முட்டி வீடியோ:
❤️❤️#Mammootty #Karaikudi #AntoJoseph @PRO_ajaykumar@johnsoncinepro
வழிப்போக்கனை கட்டியணைத்த மம்மூட்டி!
விடியற்காலை மூன்று மணி. மெகா ஸ்டார் மம்மூட்டி, தனது மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் நிதீஷ் சகாதேவ் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அவசரமாக… pic.twitter.com/VIW9ZelQ2K
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) August 14, 2026
Also Read… Ajith Kumar: டேர் டெவில் படத்திற்காக.. மாஸாக ஒர்கவுட் செய்யும் அஜித் – வைரலாகும் வீடியோ!



