இரண்டாம்கட்ட படப்பிடிப்பை தொடங்கியது தர்மன் படக்குழு – வைரலாகும் வீடியோ
Dharman Movie Second Schedule Video Goes Viral On Social Media | நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உறுவாகி வரும் படம் தர்மன். இந்தப் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து உலக அளவில் ரசிகரக்ளிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் 50 வருடங்களைக் கடந்தும் பிசியான நாயகனாக வலம் வருகிறார் நட்டிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 75 வயதைக் கடந்தும் நடிகர் ரஜினிகாந்த் தற்போதைய இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக பிசியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் 2 படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தினை தொடர்ந்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது 173-வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு தர்மன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் பணிகள் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து பல தடைகள் ஏற்பட்டு பிறகு படப்பிடிப்பு பணிகள் தொடங்கியது. ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் இந்தப் படத்தை நடிகர் கமல் ஹாசன் தயாரித்து வருகிறார்.




இரண்டாம்கட்ட படப்பிடிப்பை தொடங்கியது தர்மன் படக்குழு:
முன்னதாக படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடைப்பெற்று முடிந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது தொடங்கியது. அதன்படி தர்மன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருவதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது தொடர்பான வீடியோவைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தர்மன் படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
THE DEADLY DOCTOR #Dharman Schedule 2 Begins, and this one’s LEGENDARY#KettaPaiyanSir#SuperstarRajinikanth #KamalHaasan @rajinikanth @ikamalhaasan #Mahendran @Dir_Ashwath @anirudhofficial @anbariv @iYogiBabu @SimranbaggaOffc #RaashiKhanna @nikethbommi #KarthikRajkumar… pic.twitter.com/D961SklHiR
— Raaj Kamal Films International (@RKFI) August 13, 2026
Also Read… GV Prakash: எனது அந்த படங்களுக்கும் தேசிய விருது கிடைக்கும் என்று நினைத்தேன் – ஜி.வி. பிரகாஷ்!