விஜய்யின் சச்சின் படத்தில் வந்த சிறுமியா இது? இப்போது ஆளே எப்படி இருக்காங்கனு பாருங்க!
Sachein Movie Child Artist: தமிழ் சினிமாவில் உச்சமாக இருந்து, தற்போது அரசியல் பக்கம் சென்றிருப்பவர் முதல்வர் விஜய். இவரின் நடிப்பில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றபடம் சச்சின். அந்த படத்தில், விஜய்யுடன் வெள்ளை நிற உடையணிந்து வந்த பிரபல சிறுமி இப்போது எப்படி இருக்கிறார் என பார்க்கலாம்.
கோலிவுட் சினிமாவில் சினிமாவில் சிகரமாக இருந்துவந்தவர் முதல்வர் விஜய் (CM Vijay). இவர் தற்போது முழுமையாக அரசியலில் இறங்கிவிட்ட நிலையில், இறுதியாக ஜன நாயகன் (Jana Nayagan) படத்தில் நடித்திருந்தார். இப்படமானது கடந்த 2026ம் ஆண்டு ஜூலை 23ம் தேதியில் உலகமெங்கும் வெளியானது. இயக்குநர் எச்.வினோத்தின் (H Vinoth) இயக்கத்தில் வெளியான இப்படம் இவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்தது. இந்த படத்திற்கு பின் சினிமாவின் ஒரு படங்களிலும் நடிக்கப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் ஜன நாயகனே கடைசி படம் என அவர் அறிவித்துவிட்டார். அப்படி இருந்தும், இவரின் பழைய படங்கள் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டுவருகிறது. அதில் சச்சின் (Sachein) படம் கடந்த 2025ம் ஆண்டில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் வெள்ளை நிற உடையணிந்து சிறுமி ஒருவர், “உங்க ஸ்மைல் கியூட்ட இருக்கு” என்ற வசனத்தை பேசியிருப்பார்.
அது தொடர்பான வீடியோ மற்றும் வசனங்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம். தற்போது அந்த காட்சியில் நடித்திருக்கும் சிறுமி இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?. அவரே பகிர்ந்த இன்ஸ்டாகிராம் வீடியோ குறித்து பார்க்கலாம்.
இதையும் படிங்க: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் மமிதா பைஜூ வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?- வைரலாகும் தகவல்!
சச்சின் பட சிறுமியாக நடித்த பிரீத்தி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவு:
View this post on Instagram
இந்த வீடியோவில் பிரீத்தி என்பவர், சச்சின் படத்தில் விஜய்யுடன் நடித்த காட்சியை பகிர்ந்து, தற்போது தான் எப்படி இருப்பது என்பது போல காட்டியுள்ளார். இந்த வீடியோ பகிர்ந்த சில மணி நேரங்களில் இணையத்தில் ட்ரெண்டாகிவிட்டது. பலரும், ஒரு வழியாக அந்த சிறுமி யார் என தெரியவந்துவிட்டது என தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: இந்த சிறுவன் யாருனு தெரியுதா? ரசிகர்கள் கொண்டாடும் ராக்ஸ்டார் இவர்.. அட இவர்தான்!
சச்சின் படத்தில் நடித்த சிறுமி தற்போது என்ன செய்கிறார்:
சச்சின் படத்தில் நடித்த அந்த சிறுமியின் பெயர் பிரீத்தி. இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பாடல்கள் பாடி வீடியோவை பதிவிட்டுவருகிறார். மேலும் தற்போது தனது வாழ்க்கையை வெளிநாட்டில் கழித்துவருகிறாராம். சச்சின் படத்தின் நடித்தது, நான்தான் அந்த சிறுமி என வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், தற்போது அந்த வீடியோவுக்கு ரசிகர்களும் மற்றும் பிரீத்திக்கு இன்ஸ்டாகிராமில் பின்பற்றுவோர்களும் அதிகமாகியுள்ளார்கள். மேலும் அவர் பகிர்ந்து அந்த வீடியோ இணையத்தில் மற்றும் விஜய்யின் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவிவருகிறது.


