AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்த சிறுவன் யாருனு தெரியுதா? ரசிகர்கள் கொண்டாடும் ராக்ஸ்டார் இவர்.. அட இவர்தான்!

Kannada Actor Childhood Photo: சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் நடிகர்கள் மற்றும் திரைப் பிரபலன்களின் சிறுவயது புகைப்படங்கள் வைரலாகுவது உண்டு. அந்த விதத்தில் இந்த போட்டோவில் இருக்கும் சிறுவன் யார் தெரியுமா?, அவர் யார், எந்த நடிகர் என விவரமாக பார்க்கலாம்.

இந்த சிறுவன் யாருனு தெரியுதா? ரசிகர்கள் கொண்டாடும் ராக்ஸ்டார் இவர்.. அட இவர்தான்!
நடிகரின் சிறுவயது புகைப்படம்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 09 Aug 2026 08:12 AM IST

தென்னிந்திய சினிமாவில் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் அடையாளம் தெரியாத மற்றும் அவர்களின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் வைரலாகும். அந்த விதத்தில், மேலே இருக்கும் போட்டோவில் இருக்கும் சிறுவன் யாருனு தெரியுமா?. இவர் கன்னட சினிமாவை சேர்ந்த பிரபல நடிகர் (Kannada Actor). இவர் எந்த சினிமா பின்னணி மற்றும் சினிமா அனுபவமில்லாத குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதிலிருந்து நடிப்பின்மீது கொண்ட ஆர்வத்தினால், பள்ளி நாடகங்களில் நடிப்பதுண்டு. அது அவ்வாறே தொடர பின் கன்னட சீரியல்களில் நாயகனாக (Serial Actor) நடிக்க தொடங்கினார். சீரியலில் தொடர்ந்து நடித்துவந்த இவர், தன்னுடன் நடித்த நடிகையையே காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின் சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தினால் சினிமாவிலும் நடிக்க (Kannada Cinema) தொடங்கியிருந்தார்.

ஆரம்பகாலத்தில் இவரின் படங்களுக்கு எந்தவித வரவேற்பும் இல்லை, பின் தனது ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் கவர்ந்தார். கடந்த 2018ம் ஆண்டில் வெளியான இவரின் படமே, இவருக்கு சினிமா கேரியரில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம். அட இன்னுமா தெரியவில்லை?, இது வேறுயாருமில்லை, ஒட்டுமொத்த பான் இந்திய சினிமாவும் கொண்டாடும் ராக்ஸ்டார் யாஷ்தான் (Rockstar Yash).

இதையும் படிங்க: அந்த நடிகரின் நடிப்பு எனக்கு ரொம்பவே பிடிக்கும் – அஜித் குமார் ஓபன் டாக்!

நடிகர் யாஷின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Radhika Pandit (@iamradhikapandit)

நடிகை யாஷ் சினிமாவில் கடந்துவந்த பாதைகள் :

நடிகர் யாஷ் எந்தவித சினிமா பின்னணி இல்லாத குடும்பத்தில் பிறந்தவர். ஆரம்பத்தில் சிறு சிறு சீரியல்களில் நடித்துவந்தார். மேலும் கடந்த 2005ம் ஆண்டில் வெளியான நந்தா கோகுல என்ற கன்னட சீரியலில் லீட் நாயகனாக நடித்தார். இந்த சீரியலை தொடர்ந்து 2007ம் ஆண்டில் “ஜம்படா ஹுடுகி” என்ற படத்தில் துணை வேடத்தில் நடித்திருந்தார். பின் 2008ம் ஆனதில் வெளியான ராக்கி என்ற படத்தின் நடிக்க தொடங்கியிருந்தார். இப்படங்களை தொடர்ந்து சினிமாவில் லீட் நாயகனாகவே நடிக்க தொடங்கிய நிலையில், பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: வேற யாராவது இருந்தால் பிச்சிட்டு ஓடியிருப்பாங்க.. வருங்கால மனைவி சாய் தன்ஷிகா குறித்து புகழ்ந்து பேசிய விஷால்!

வெறும் கன்னட நடிகராக மட்டும் இருந்த இவருக்கு, பான் இந்திய பிரபலத்தை கொடுத்தது கேஜிஎப். 2018ம் ஆண்டில் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளியான இப்படம் இவருக்கு பான் இந்திய ஹிட்டை கொடுத்தது. இதற்கு பின் 2023ம் ஆண்டில் கேஜிஎப் 2 போன்ற படங்களை கொடுத்தார். மேலும் 2026 வருடத்தில் இவரின் நடிப்பில் டாக்ஸிக் மற்றும் ராமாயணா பார்ட் 1 என இரு படங்கள் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us