AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பேக் இன் ஆக்ஷன்.. சிறப்பாக தொடங்கியது சிலம்பரசனின் அரசன் பட அடுத்த செட்யூல் ஷூட்டிங்!

Arasan Film shoot: நடிகர் சிலம்பரசன் மற்றும் வெற்றிமாறனின் கூட்டணியில் சிறப்பாக உருவாகிவரும் திரைப்படம் அரசன். இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பேக் இன் ஆக்ஷன் காட்சிகளுடன் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிட்டதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அப்டேட் கொடுத்துள்ளார்.

பேக் இன் ஆக்ஷன்.. சிறப்பாக தொடங்கியது சிலம்பரசனின் அரசன் பட அடுத்த செட்யூல் ஷூட்டிங்!
சிலம்பரசனின் அரசன் படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 11 Aug 2026 10:39 AM IST

கோலிவுட் ரசிகர்கள் கொண்டாடவும் நாயகனாக இருந்துவருபவர் நடிகர் சிலம்பரசன் (Silambarasan). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து புது படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக கமல்ஹாசனின் தக் லைஃப் (Thug Life) என்ற படத்தில் செகண்ட் ஹீரோ ரோலில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின் சில படங்களில் ஒப்பந்தமான நிலையில், அந்த படத்தையெல்லாம் தவிர்த்து இயக்குநர் வெற்றிமாறனுடன் (Vetri Maaran) இணைந்துவிட்டார். இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் சிலம்பரசன் இணைந்த திரைப்படம்தான் அரசன் (Arasan). இப்படம் ஆரம்பத்தில் STR49 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின் அரசன் என டைட்டில் கொடுக்கப்பட்டது. இப்படக்குழு அவ்வப்போது அரசன் பட ஷூட்டிங் புகைப்படங்களை பகிர்வது வழக்கமே.

சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டதாக வட்டாரங்களில் தகவல்கள் பரவிவந்த நிலையில், ஷூட்டிங் மீண்டும் ஆக்ஷன் காட்சிகளுடன் தொடங்கியுள்ளதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு (Kalaipuli S Thanu) அப்டேட் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் மமிதா பைஜூ வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?- வைரலாகும் தகவல்!

அரசன் திரைப்படத்தின் ஷூட்டிங் குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு கொடுத்த அப்டேட் பதிவு:

அரசன் திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது:

இந்த அரசன் படத்தில் சிலம்பரசன் லீட் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக டூரிஸ்ட் பேமிலி நடிகை யோகலட்சுமி நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, யோகி பாபு, ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடிக்கிறார்கள். குறிப்பாக வட சென்னை படத்தில் நடிகர்களும் இப்படத்தில் சிறப்பான வேடத்தில் நடிக்கிறார்கள். இப்படம் வட சென்னை படத்தின் டைம் லைனில் நடக்கும் மற்றொரு கதையை மையமாக கொண்ட படமாக உருவாக்கப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: டிசி படத்தின் மீது வைத்த நம்பிக்கை… கலாநிதி மாறனை சந்தித்து நன்றி சொன்ன லோகேஷ் கனகராஜ்!

இதற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, படத்தின் பாடல்களும் சிறப்பாக உருவாகியுள்ளது. அந்த வகையில் இப்படத்தை 2026ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்ட நிலையில், இன்னும் இப்படத்தின் ஷூட்டிங் முடியவில்லை. அதனால் 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படத்தை படக்குழு வெளியிட திட்டமிட்டுவருவதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் ஷூட்டிங்கை வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் முழுமையாக முடிக்க படக்குழு பிளான் போடுகிறதாம். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட 70 சதவீதத்திற்கும் மேல் முடிவடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

Follow Us