AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சிலம்பரசன் – அஸ்வத் மாரிமுத்துவின் STR51 பட நிலை என்ன? – தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அப்டேட்!

Silambarasan & Ashwath Marimuthu Film Shoot: தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சிலம்பரசன். இவர் அரசன் படத்திற்கு பின் அஸ்வத் மாரிமுத்துவின் STR51 படத்தில் இணைவார் என கூறப்பட்ட நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் மற்றும் இதன் நிலை குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அப்டேட் கொடுத்துள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

சிலம்பரசன் – அஸ்வத் மாரிமுத்துவின் STR51 பட நிலை என்ன? – தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அப்டேட்!
சிலம்பரசனின் STR51 படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 07 Aug 2026 10:50 AM IST

நடிகர் சிலம்பரசனின் (Silambarasan) நடிப்பில் தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக இவரின் நடிப்பில் தக் லைஃப் (Thug Life) என்ற படமானது வெளியானது. இயக்குநர் மணி ரத்தினத்தின் (Mani Ratnam) இயக்கத்தில் 2025ம் ஆண்டில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இப்படத்திற்கு பின் வெற்றிமாறனின் (Vetri Maaran) இயக்கத்தில் சிலம்பரசன் அரசன் (Arasan) என்ற திரைப்படத்தில் இணைந்துவிட்டார். ஆனால் இதற்கு முன், பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுடன் புது படத்தில் இணைவதாக அறிவிப்பட்டிருந்தது. ஆனால் கதையின் பிரச்சனையின் காரணமாக அதிலிருந்து சிலம்பரசன் விலகிவிட்டாராம். இதற்கு பின்னரே இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் சிம்பு இணைந்தார். மேலும் இப்படத்தை முடித்த கையேடு அஸ்வத் மாரிமுத்து (Ashwath Marimuthu) இயக்கத்தில் சிம்பு இணைவதாக கூறப்பட்டது.

ஆனால் அஸ்வத் தற்போது ரஜினிகாந்தின் (Rajinikanth) தர்மன் (Dharman) படத்தை இயக்குவதில் பிசியாக உள்ளார். மேலும் அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, சிலம்பரசன் மற்றும் அஸ்வத் மாரிமுத்து படத்தின் நிலை குறித்து விவரித்துள்ளார்.

இதையும் படிங்க: அந்த நடிகரின் நடிப்பு எனக்கு ரொம்பவே பிடிக்கும் – அஜித் குமார் ஓபன் டாக்!

சிலம்பரசன் மற்றும் அஸ்வத் மாரிமுத்துவின் STR51 படம் குறித்து அர்ச்சனா கல்பாத்தி:

அந்த பேட்டியில் பேசியிருந்த தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, அதில் “STR51 திரைப்படத்தி ஷூட்டிங்கிங் அடுத்த ஆண்டு (2027) தொடங்கும் என நம்புகிறேன். அஸ்வத், ரஜினிகாந்தின் சாரின் தர்மன் படத்தின் ஷூட்டிங்கை முடியவேண்டும். மேலும் சிம்பு சார் அரசன் படத்தின் ஷூட்டிங்கை முடிக்கவேண்டும், அந்த படங்கள் எல்லாம் முடிந்ததும், STR51 படத்தை தொடங்குவோம். ஆரம்பத்தில் அரசன் படத்துடன் STR51 படத்தை இயக்குவதாக திட்டமிடப்பட்டது.

இதையும் படிங்க: துபாய் மாப்பிள்ளை ரிஷிகாந்த்.. அமைதியான மருமகளாக அனிஷிமா – வைரலாகும் மொத ராத்திரி பட கேரக்டர் போஸ்டர்ஸ்!

ஆனால், அஸ்வத் மாரிமுத்துவுக்கு திரைக்கதையை முழுமையாக உருவாக்க நேரம் தேவைப்பட்டது. டிராகன் படத்தை எடுத்தபோது, ​​அவர் எழுதியதை ஒரு காட்சியைக் கூட வெட்டாமல் அப்படியே படமாக்கினோம். அதனால், இப்படத்தின் கதையை செம்மைப்படுத்தத் தேவையான நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்று அவரிடமும், சிம்புவிடமும் கூறினோம். ரஜினிகாந்த் தர்மன் படத்தை முடித்த பிறகு இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

சிலம்பரசன் மற்றும் அஸ்வத் மாரிமுத்துவின் படம் குறித்து அர்ச்சனா கல்பாத்தில் பேசியது தொடர்பாக வைரலாகும் பதிவு:

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தற்போது ரஜினிகாந்தின் தர்மன் படத்தை இயக்குவதில் மிகவும் பிசியாக உள்ளார். இந்த படத்தில் சிம்ரன் மற்றும் ராஷி கண்ணா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துவருகிறார். இதன் ஷூட்டிங் தற்போது சென்னை பகுதிகளில் தீவிரமாக நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us