Sivakarthikeyan: திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பாடலாசிரியராக இணைந்த சிவகார்த்திகேயன்!
Sivakarthikeyan Joins SIFWA: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்துவருபவர் சிவகார்த்திகேயன். இவர் சினிமாவில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் பல பணிகளையும் சிறப்பாக செய்துவருகிறார். அந்த வகையில் இவர் இன்று (22/09/2026) தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைந்துள்ளார். இது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவர் சினிமாவில் தொடர்ந்து நாயகனாக பல படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பராசக்தி (Parasakthi). இந்த படமானது கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியான நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின் அடுத்தடுத்து புது படங்களில் நாயகனாக ஒப்பந்தமாகியிருந்தார். அதில் ஒன்றுதான் சேயோன் (Seyon). இது சிவகார்த்திகேயனின் SK26 என அறிவிக்கப்பட்டிருந்தது. இதை கமல்ஹாசன் தயாரிக்க, இயக்குநர் சிவகுமார் முருகேசன் (Sivakumar Murugesan) இயக்கிவருகிறார். இப்படத்தின் 2வது கட்ட ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், விரைவில் 3வது கட்ட ஷூட்டிங் தொடங்கும் என கூறப்படுகிறது.
அந்த வகையில் சிவகார்த்திகேயன் சினிமாவில் வெறும் நடிகராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் இருந்துவருகிறார். இத்தகைய பணிகளை செய்துவரும் சிவகார்த்திகேயன் தற்போது, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் (South Indian Film Writers Association) இணைந்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: ரத்த கறையில்… நானியின் தி பாரடைஸ் படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்? – சென்சார் அப்டேட் இதோ!
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் இணைந்த சிவகார்த்திகேயன்:
இந்நிலையில் இன்று (22/09/2026) தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் சேரன், பொதுச் செயலாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் சுந்தர்ராஜன், துணைத் தலைவர் சினேகன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களான இயக்குநர் செல்வா பாரதி, இயக்குநர் கே.பி.பி. நவீன் ஆகியோர், திரு. சிவகார்த்திகேயனுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், எழுத்தாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ள ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அவரை அழைப்பதற்காகவும் அவரைச் சந்தித்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, அவர் சங்கத்தில் பாடலாசிரியராக இணைந்தது மட்டுமல்லாமல், சங்கத்தின் நலனுக்காகப் பல ஆலோசனைகளையும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கர்ணனாக ராகவா லாரன்ஸ்.. வெளியானது மஹாவீர் கர்ணா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
சிவகார்த்திகேயன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைந்ததாக வைரலாகும் பதிவு:
#Sivakarthikeyan joins the South Indian Film Writers Association as a lyricist.
Today, South Indian Film Writers Association President Cheran, General Secretary Pattukottai Prabhakar, Treasurer Sundarrajan, Vice President Sinegan, and Executive Committee Members, Director Selva… pic.twitter.com/yWpz7zU8n9
— Movies Singapore (@MoviesSingapore) September 22, 2026
சிவகார்த்திகேயன் சினிமாவில் சிறந்த ஒருவராக இருந்துவரும் நிலையில், தற்போது தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைந்துள்ளார். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.