AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சிவகார்த்திகேயனின் 27-வது படத்திற்கு சட்ட சிக்கல்? வைரலாகும் தகவல்

Sivakarthikeyan 27 Movie Update | நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது 26-வது படமான சேயோன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் அடுத்ததாக உருவாக உள்ள 27-வது படத்தின் பூஜை சமீபத்தில் நடைப்பெற்றது. இந்த நிலையில் அந்தப் படத்திற்கு சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சிவகார்த்திகேயனின் 27-வது படத்திற்கு சட்ட சிக்கல்? வைரலாகும் தகவல்
சிவகார்த்திகேயன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 18 Sep 2026 07:30 AM IST

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் உருவாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக பராசக்தி படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் அடுத்ததாக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் தனது 26-வது படத்திற்கு இணைந்தார். இந்தப் படத்தை நடிகர் கமல் ஹாசன் தயாரித்து வரும் நிலையில் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படத்திற்கு சேயோன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து தனது 27-வது படத்திற்காக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் உடன் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜை சமீபத்தில் நடைப்பெற்ற நிலையில் படத்திற்கு ஒரு சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சிவகார்த்திகேயனின் 27-வது படத்திற்கு சட்ட சிக்கல்?

அந்த வகையில் சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இணையும் SK 27 திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில், தற்போது இப்படம் தொடர்பான சட்ட விவகாரம் ஒன்று குறித்த பேச்சு எழுந்துள்ளது. இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு டான் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ஏற்கனவே இருந்த ஒப்பந்தத்தைக் குறிப்பிட்டு, அந்நிறுவனம் ‘SK 27’ படக்குழுவினருக்குச் சட்டப்பூர்வ அறிவிப்பு (legal notice) ஒன்றை அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

STR 49 படத்திற்காக முன்பு உருவாக்கப்பட்ட அதே கதையை, ‘டான் பிக்சர்ஸ்’ நிறுவனத்திடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் (NOC) பெறாமல் வேறொரு தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுத்துச் செல்ல முடியுமா என்பது குறித்தே இந்த விவாதம் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Also Read… இதுதான் ஜன நாயகமா? பிக்பாஸில் லீடரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் போட்டியாளர்கள் – வைரலாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… தம்பி சூரி மிகப்பெரிய சம்பவம் செய்திருக்கிறாய் – சமுத்திரகனி பாராட்டு

Follow Us