தம்பி சூரி மிகப்பெரிய சம்பவம் செய்திருக்கிறாய் – சமுத்திரகனி பாராட்டு
Samuthirakani praised actor Soori | நடிகர் சூரியின் நடிப்பில் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் படம் மண்டாட்டி. இதனைப் பார்த்த சமுத்திரகனி நடிகர் சூரியை வெகுவாகப் பாராட்டி உள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் தொடர்ந்து சின்ன சின்ன வேலைகளை சினிமாவில் செய்து வந்த சூரி பிறகு படங்களில் காமெடி கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்தார். தொடர்ந்து தனது காமெடியின் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நடிகர் சூரி தொடர்ந்து முன்னணி காமெடி நடிகராக மாறினார். அதன்படி பல ஹிட் படங்களில் முன்னணி நாயகன்களுடன் இணைந்து நடித்து வந்த நடிகர் சூரி பிறகு படங்களில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். அதன்படி கடந்த 2023-ம் ஆண்டு முதல் நாயகனாக நடிக்கத் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து ஹிட் படங்களையே கொடுத்து வருகிறார். அதன்படி சூரி நாயகனாக நடிக்கத் தொடங்கி தொடர்ந்து 6 படங்கள் இதுவரை திரையங்குகளில் வெளியாகி உள்ளது. அதில் இறுதியாக வெளியான படம் மண்டாட்டி.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கிய இந்தப் படம் கடந்த 10-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்தப் படம் கடல் மற்றும் கடல் சார்ந்த வாழ்வியலை மையமாக வைத்து ஒரு ஸ்போர்ட்ஸ் ட்ராமா பாணியில் உருவாகி உள்ளது. படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் மட்டும் இன்றி பிரபலங்கள் பலரும் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்த மண்டாட்டி படத்தைப் பார்த்த நடிகரும் இயக்குநருமான சமுத்திரகனி பாராட்டி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவினை வெளியிட்டுள்ளார்.




தம்பி சூரி மிகப்பெரிய சம்பவம் செய்திருக்கிறாய்:
அதன்படி சமுத்திரகனி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது, மண்டாட்டி ரட்டு வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி சூரி மிகப்பெரிய சம்பவம் செய்திருக்கிறாய்… மீண்டும் மீண்டும் நீ வெல்ல வேண்டும்…இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். இன்னும் பல உச்சிகள் தொட வாழ்த்துக்கள்.. குழுவினர் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று அவர் அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… பிக்பாஸ் தமிழ் போட்டியாளர்களிடையே வலுக்கும் மோதல்… வைரலாகும் தகவல்!
சமுத்திரகனி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
MANDAADI💪💪💪முரட்டு வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ; தம்பி சூரி மிகப்பெரிய சம்பவம் செய்திருக்கிறாய் …மீண்டும் மீண்டும் நீ வெல்ல வேண்டும் …இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்்இன்னும் பல உச்சிகள் தொட வாழ்த்துக்கள் ..குழுவினர் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.. pic.twitter.com/25DO2uWwx1
— P.samuthirakani (@thondankani) September 16, 2026
Also Read… ஹாலிவுட்டில் ரீமேக்காகும் விஜய் சேதுபதியின் மகாராஜா படம்? வைரலாகும் தகவல்