இந்த சடங்கின் முழுமையான அர்த்தம் எனக்குத் தெரியாமல் இருக்கலாம்… தனது சீமந்தம் குறித்து பேசிய நடிகை சமந்தா – வைரலாகும் போஸ்ட்
Actress Samantha Baby Shower Photos | பான் இந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா ரூத் பிரபு. இவர் தற்போது கர்பமாக இருக்கும் நிலையில் அவருக்கு வலைகாப்பு நடைப்பெற்ற புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நடிகை நடிகை சமந்தா ரூத் பிரபு தெலுங்கு சினிமா மூலம் நாயகியாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகை சமந்தா ரூத் பிரபு பிறகு தமிழ் மொழிகளிலும் அதிக அளவில் படங்களில் நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அதிக அளவில் நடித்து வந்த நடிகை சமந்தாவின் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. மேலும் நடிகை சமந்தா மற்ற மொழிகளிலும் அவ்வபோது படங்களில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடிகை சமந்தாவின் சினிமா வாழ்க்கை தொடர்பான செய்திகள் அதிக அளவில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
அந்த வகையில் நடிகை சமந்தா கடந்த டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு இயக்குநர் ராஜ் நிடிமோருவை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார். பல நாட்களாக இவர்கள் குறித்து செய்திகள் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் திருமணம் அனைத்தையும் முடித்துவைத்தது.




தனது சீமந்தம் குறித்து பேசிய நடிகை சமந்தா – வைரலாகும் போஸ்ட்:
அதனைத் தொடர்ந்து சினிமா வாழ்க்கையில் பிசியாக இருந்து வந்த நடிகை சமந்தா ரூத் பிரபு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் தனக்கு சீமந்தம் நடைப்பெற்றது. அந்த சடங்கு குறித்து தனக்கு முழு விவரம் தெரியவில்லை என்றாலும் அந்த சடங்கை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டதாகவும் அது மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அந்தப் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களிடையே இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… தீபாவளி ரிலீஸை உறுதி செய்தது மூக்குத்தி அம்மன் 2 படக்குழு – வைரலாகும் டீசர்!
சமந்தா ரூத் பிரபு வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
Also Read… ரன்பீர் கபூரின் ராமாயணா படத்திலிருந்து வெளியானது ஜெய் ஜெய் ராம் பாடல்!