தமிழ் சினிமா ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும் நடிகர் மிதுன் ஜெய் சங்கர்!
Actor Mithun Jai Sankar | மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது தமிழ் சினிமாவில் அடுத்தடுத்தப் படங்களில் நடித்து ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறார். அவரது திரைப்பயணம் குறித்து தற்போது இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது தமிழ் சினிமாவில் தொடர்ந்து சிறந்த படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகர் மிதுன் ஜெய் சங்கர். இவர் மலையாள சினிமாவில் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் ஃபகத் பாசில் நாயகனாக நடித்த ஆவேஷம் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். மேலும் அந்தப் படத்தில் நடிகர் ஃபகத் பாசில் மற்றும் மிதுன் ஜெய் சங்கர் இடையே ஒரு அழகான கனெக்ஷன் இருக்கும். அந்த இணைப்பு தான் படத்தின் அந்த கதைக்கு மிகவும் ஸ்ட்ராங்கான புள்ளியாக இருக்கும். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தை தொடர்ந்து டூரிஸ்ட் ஃபேமிலி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார் மிதுன் ஜெய் சங்கர். இந்தப் படத்தில் நடிகர்கள் சசிகுமார் மற்றும் சிம்ரனின் மூத்த மகனாக நடித்து இருந்தார். இதில் மிதுன் ஜெய் சங்கரின் கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தினை தொடர்ந்து நடிகர் மிதுன் ஜெய் சங்கர் தற்போது நடிகர் சூரி உடன் இணைந்து மண்டாட்டி படத்தில் நடித்து உள்ளார். இந்தப் படத்தில் இவரது கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே தற்போது அதிக வரவேற்பைப் பெற்று வருகின்றது.




தமிழ் சினிமா ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும் மிதுன் ஜெய் சங்கர்:
ஆவேஷம் மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் மிதுன் ஜெய் சங்கர், மண்டாட்டி படத்தில் ஒரு சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் மீண்டும் அனைவரையும் கவர்ந்துவிடுகிறார். இடைவேளைக் காட்சியிலும், உச்சக்கட்டக் காட்சியிலும் சூரியுடன் அவரது இருப்பு, கதாநாயகன் மற்றும் வில்லன் ஆகிய இருவரின் ஆற்றலையும் சமமாகப் பொருத்தி, கதையின் உண்மையான மையமாக அவர் திகழ்கிறார். அவரது காட்சியுடன் தொடங்கும் படமே படத்தின் போக்கை நிர்ணயிக்கிறது.
Also Read… அன் ஆர்டினரி மேன் படத்தின் ஹையர் புரோமோ பாடல் 5 மில்லியன் பார்வைகளைக் கடந்தது
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#MithunJaiSankar is his PEAK 🔥
– After delivering strong performances in Aavesham and Tourist Family, he once again steals the show with a powerful role in #Mandaadi 💥
– His presence in the interval block and climax alongside #Soori is, He matches the hero and villain energy… pic.twitter.com/XH4ujR6izY
— Movie Tamil (@_MovieTamil) September 11, 2026
Also Read… லண்டனில் கூடிய ரசிகர்கள்… அஜித் குமார் விடுத்த அன்பான வேண்டுகோள் – வைரலாகும் வீடியோ