லண்டனில் கூடிய ரசிகர்கள்… அஜித் குமார் விடுத்த அன்பான வேண்டுகோள் – வைரலாகும் வீடியோ
Ajith Kumar London Video | லண்டனில் நடைபெற உள்ள கார் ரேஸிங்கில் கலந்து கொள்வதற்காக நடிகர் அஜித் குமார் தனது அணியுடன் அங்கு கூடியுள்ளார். இந்த நிலையில் அவரது ரசிகர்கள் திரண்டு நிற்பதால் அவர்களிடம் அஜித் குமார் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் அஜித் குமார் தனது ரேஸிங்கிலும் அதிக அளவில் கவனம் செலுத்தி வருகின்றார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிப்பதற்கு எந்த அளவிற்கு முக்கியதுவம் கொடுக்கிறாரோ அதைவிட ஒருபடி அதிகமாக அஜித் குமார் தனது கார் ரேஸிங்கில் அதிக அளவில் கவனத்தை செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதிக நாடுகளுக்கு சென்று நடிகர் அஜித் குமாரின் கார் ரேஸிங் அணி போட்டிகளில் கலந்துகொண்டு தொடர்ந்து பல விருதுகளை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து தற்போது தமிழ் நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸில் அதிக கவனத்தை செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த செய்தி ஒரு பக்கம் வைரலாகி வரும் நிலையில் இன்று லண்டனில் நடைபெறும் போட்டியைப் பார்ப்பதற்காகவும் தொடங்கி வைக்க நடிகர் விஜய் லண்டன் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




லண்டனில் கூடிய ரசிகர்களுக்குஅஜித் விடுத்த அன்பான வேண்டுகோள்:
இந்த நிலையில் லண்டனில் கார் ரேஸிங் நடைபெறும் இடத்தில் போட்டியைப் பார்ப்பதற்காகவும் அஜித் குமாரை பார்ப்பதற்காகவும் ரசிகர்கள் அதிக அளவில் கூடி நின்று கொண்டு இருந்தனர். அவர்களைப் பார்த்து பேசிய நடிகர் அஜித் குமார், நிறைய வாகனங்கள் வந்து செல்லும். கொஞ்சம் ஓரமாக நில்லுங்கள். மன்னிக்கவும். நான் மிக முக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்ல முயற்சிக்கிறேன், ஆனால் நீங்கள் அதைக் கவனிப்பதாகத் தெரியவில்லை. இது மிகவும் கட்டுப்பாடுகள் நிறைந்த பகுதி. உங்களுக்கோ அல்லது வேறு யாருக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வருகை தந்தமைக்கு நன்றி என்று தெரிவித்து இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Sivakarthikeyan: சூரி அண்ணனின் கடின உழைப்பு.. மண்டாடி படக்குழுவை வாழ்த்திய சிவகார்த்திகேயன்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Ajithkumar‘s Request to fans :
“A Lot of cars will come and go.. Konjam orama nillunga.. Excuse me.. I’m trying to say something very important and you don’t seem to pay attention.. This is a very restricted area.. Make sure that you don’t get hurt and nobody else gets hurt..…
— Laxmi Kanth (@iammoviebuff007) September 11, 2026
Also Read… ஓடிடியில் வெளியாகி உள்ள மாதவனின் ஜிடிஎன் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ