AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Sivakarthikeyan: சூரி அண்ணனின் கடின உழைப்பு.. மண்டாடி படக்குழுவை வாழ்த்திய சிவகார்த்திகேயன்!

Sivakarthikeyan Congratulates Soori : தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நாயகனாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் சமீபத்தில் சூரியின் மண்டாடி திரைப்படத்தை பார்த்திருந்த நிலையில், அவரின் படத்திற்கு படக்குழுவுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பதிவில் தெரிவியுள்ளார்.

Sivakarthikeyan: சூரி அண்ணனின் கடின உழைப்பு.. மண்டாடி படக்குழுவை வாழ்த்திய சிவகார்த்திகேயன்!
சூரிக்கு வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 10 Sep 2026 16:55 PM IST

கோலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் பொருவராக இருந்துவருபவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்களில் நாயகனாக நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பராசக்தி (Parasakthi). கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இப்படமானது உலகமெங்கும் வெளியானது. திரையரங்குகளில் வெளியாகிய இப்படமானது இவருக்கு கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தது. இந்த படத்திற்கு பின் தாய் கிழவி பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் (Sivakarthikeyan) இயக்கத்தில் சேயோன் (Seyon) படத்தில் நாயகனாக இணைந்திருந்தார். இந்த படத்தை கமல்ஹாசன் (Kamal Haasan) தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இன்று 2026ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதியில் திரையரங்குகளில் சூரியின் (Soori) மண்டாடி (Mandaadi) திரைப்படமானது வெளியாகியுள்ளது. இந்த படத்தை பார்த்த சிவகார்த்திகேயன், மண்டாடி படக்குழுவை வாழ்த்தி எக்ஸ் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே… 16 ஆண்டுகளைக் கடந்தது பாஸ் என்கிற பாஸ்கரன் படம் – கொண்டாடும் ரசிகர்கள்

மண்டாடி திரைப்படத்தை வாழ்த்தி நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

அந்த பதிவில் சிவகார்த்திகேயன், “சூரி அண்ணனின் கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் தளராத அர்ப்பணிப்பு ஆகியவை உண்மையாகவே பலனளித்துள்ளன. நல்ல உள்ளடக்கம் எப்போதும் பெரிய வெற்றியைப் பெறும்! என் அன்பு அண்ணனுக்கும், இந்த மாபெரும் வெற்றிக்குக் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்” என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

சூரி மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து நடித்த படங்கள்:

நடிகர் சூரி மற்றும் சிவகார்த்திகேயனின் கூட்டணியில் இதுவரை பல படங்கள் வெளியாகியுள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் இவர்கள் இருவரின் காம்போ பிரபலமான நிலையில், இதன் பின் ரஜினி முருகன், சீமராஜா மற்றும் டான் போன்ற படங்களில் இணைந்திருந்தார். இறுதியாக இந்த கூட்டணியின் டான் என்ற படமானது வெளியானது.

இதையும் படிங்க: விஜய் சேதுபதியின் பத்தா படத்திலிருந்து வெளியானது மகளே பாடல்!

இதை இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பின் சூரி தற்போது படங்களில் ஹீரோவாக நடிக்கும் நிலையில், சிவகார்த்திகேயனுடன் படங்களில் எதுவும் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விதத்தில் நடிகர் சூரியின் நடிப்பில் சமீபத்தில் மண்டடை படமானது வெளியான நிலையில், அதை பாராட்டி சிவகார்த்திகேயன் பதிவை வெளியிட்டுள்ளார். இது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

Follow Us