AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறுவது இவரா? எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் இருந்தும் வேஸ்ட்

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தற்போது தொடங்கி 7-வது வாரம் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் இன்றைய நாளில் யார் பிக்பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேறுகிறார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறுவது இவரா? எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் இருந்தும் வேஸ்ட்
பிக்பாஸ்
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Oct 2026 15:58 PM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10) நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 50 நாட்கள் நிறைவடைந்துள்ளது. கடந்த 8-வது சீசனில் இருந்து தொடர்ந்து இந்த பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் அவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவரின் ஆலோசனைபடி அவர் ஓய்வு எடுக்கும் நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கி வருகிறார். நேற்றைய எபிசோடில் வாரம் முழுவதும் நடைப்பெற்ற டாஸ்க் மற்றும் போட்டியாளர்களின் நடத்தை குறித்து பேசியது மட்டுமின்றி அத்துமீறிய சில போட்டியாளர்களிடையே கண்டிப்புடனும் பேசினார். அவர் அப்படி பேசியது ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று ஞாயிற்று கிழமை வீட்டில் உள்ள போட்டியாளர்களிடையே தொடர்ந்து 50வது நாள் கொண்டாத்தத்தை பேசிய அவர் பிறகு எவிக்‌ஷன் குறித்தும் பேசியது இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் இந்த வீட்டில் இருந்து இந்த வாரம் யார் வெளியேறுகிறார்கள் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறுவது இவரா?

அதன்படி இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் எவிக்‌ஷனில் உள்ள போட்டியாளர்கள் ஒன்றாக அமர்த்தி வைக்கப்பட்டு இருந்தனர். அதில் உள்ளவர்களை காப்பாற்ற நினைக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஷமா தனக்கு அதனை பயண்படுத்த விரும்புகிறாரா என்றும் கேட்கப்பட்டது. ஆனால் இப்போது அதை பயன்படுத்தவில்லை என்று அவர் கூறினார். இந்த நிலையில் இன்று அவரே இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Also Read… என்னை மறந்தாலும் உன்னை மறவாத நெஞ்சோடு நானிருப்பேன்… 23 ஆண்டுகளைக் கடந்தது விஜய் – ஜோதிகா நடிப்பில் வெளியான திருமலை படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இந்த வீக்கெண்டில் எந்தெந்த படங்கள் ஓடிடியில் வெளியானது தெரியுமா? லிஸ்ட் இதோ!

Follow Us