AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“குழந்தைகளை வைத்து ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த விஜய் மாமா எங்கே போனார்?” – கனிமொழி எம்.பி. கடும் விமர்சனம்!

MP Kanimozhi On CM Vijay: தமிழகத்தில் குழந்தைகள் பல்வேறு வழிகளில் பாதிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டிய கனிமொழி, “இப்படி எல்லா வழிகளிலும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாகத் தமிழ்நாடு மாறிவிட்டது. குழந்தைகளை வைத்து ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த விஜய் மாமா எங்கே போனார்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

“குழந்தைகளை வைத்து ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த விஜய் மாமா எங்கே போனார்?” – கனிமொழி எம்.பி. கடும் விமர்சனம்!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 25 Oct 2026 15:42 PM IST

அக்டோபர் 25, 2026:  தமிழகத்தில் குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, விஜய் தலைமையிலான தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார். “குழந்தைகளை வைத்து ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த விஜய் மாமா எங்கே போனார்?” என அவர் தனது சமூக வலைதளப் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குழந்தைகள் காணாமல் போனதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக அரசின் நடவடிக்கைகள் குறித்து கனிமொழி இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

“குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாகத் தமிழகம் மாறிவிட்டது”

கனிமொழி தனது பதிவில், செஞ்சியில் காணாமல் போன ஏழு வயது சிறுமியை 14 நாட்களாகியும் கண்டுபிடிக்க முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், வேளாங்கண்ணிக்குச் சென்ற இரண்டு சிறுமிகளை விடுதியில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள செய்தி நெஞ்சைப் பதற வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளத்தில் இரு சிறுமிகள் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தையும், ஒரு சிறுவன் அரிவாளால் வெட்டப்பட்டு சிகிச்சை பெற்று வருவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  கோவையில் சாதிய வன்கொடுமை காரணமாக 11-ஆம் வகுப்பு மாணவர் உயிரை மாய்த்துக் கொண்டதாகக் கூறப்படும் சம்பவத்தையும், கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்று வந்த நான்கு வயது சிறுவன் உயிரிழந்ததையும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களைப் பகிர்ந்ததாகக் குற்றச்சாட்டு: ஆரணி அருகே ஓய்வுபெற்ற ராணுவ கேப்டன் கைது

“விஜய் மாமா எங்கே போனார்?”


தமிழகத்தில் குழந்தைகள் பல்வேறு வழிகளில் பாதிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டிய கனிமொழி, “இப்படி எல்லா வழிகளிலும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாகத் தமிழ்நாடு மாறிவிட்டது. குழந்தைகளை வைத்து ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த விஜய் மாமா எங்கே போனார்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

செஞ்சி சிறுமி மாயமான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

இதற்கிடையே, விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் கடந்த 11-ஆம் தேதி இரவு தூங்கிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமி காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியைக் கண்டுபிடிக்க காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். இருப்பினும், விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாததைத் தொடர்ந்து வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. தற்போது சிபிசிஐடி அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: வாக்களிக்காதவர்கள் இல்லை வாக்களித்தவர்கள் கூட புலம்பும் நிலையில் தான் இன்றைய ஆட்சி இருக்கிறது – மு.க ஸ்டாலின் தாக்கு..

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குழந்தைகள் மாயம்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 12 வயது சிறுவன், டியூஷனுக்குச் செல்வதாகக் கூறிவிட்டுக் காணாமல் போனதாகத் தகவல் வெளியானது. பின்னர் அந்தச் சிறுவன் சென்னையில் பத்திரமாக மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 

Follow Us