AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IPL 2027: ஆர்சிபி வெற்றிக்கும்.. சிஎஸ்கே தோல்விக்கும் இதுதான் காரணம்.. சீக்ரெட்டை உடைத்த தோனி!

MS Dhoni Praises RCB Performance: முன்னாள் சிஎஸ்கே கேப்டன் தோனி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் தொடர் ஐபிஎல் வெற்றியை வெளிப்படையாகப் பாராட்டினார். கடந்த இரு சீசன்களில் சிஎஸ்கேவின் சவாலான செயல்பாட்டையும் ஒப்புக்கொண்டார். கடினமான காலங்களைச் சமாளிப்பது மற்றும் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். காயங்களைக் குறைத்து, வீரர்களின் பொறுப்புகளைத் தெளிவுபடுத்துவதன் மூலம் 2027 ஐபிஎல்லுக்கு சிஎஸ்கே வலுவாகத் திரும்பும் என்றார்.

IPL 2027: ஆர்சிபி வெற்றிக்கும்.. சிஎஸ்கே தோல்விக்கும் இதுதான் காரணம்.. சீக்ரெட்டை உடைத்த தோனி!
எம்.எஸ்.தோனி - விராட் கோலி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 25 Oct 2026 15:48 PM IST

ஐபிஎல் 2027 மினி ஏலத்திற்கு முன்பாக முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி (MS Dhoni), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் அபாரமான வெற்றி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் சமீபத்திய மோசமான செயல்பாடு குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். பெங்களூருவில் நடைபெற்ற ஒரு சுகாதார நிகழ்ச்சியில் பேசிய தோனி, கடந்த 2 ஆண்டுகளாக RCB அணி மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதை ஒப்புக்கொண்டார். ஒரு எதிரணியின் நல்ல செயல்பாட்டைப் பாராட்டுவதில் எந்தத் தயக்கமும் இருக்கக்கூடாது என்றும் கூறினார்.

ALSO READ: பொல்லார்ட்க்கு பெருமை சேர்த்த தருணம்.. பயிற்சியாளராக நியமித்த மும்பை இந்தியன்ஸ்!

ஆர்சிபி அணியின் தொடர் வெற்றிகள்:

சிஎஸ்கேவின் கடினமான காலங்களும் ஆர்சிபியின் தொடர் வெற்றிகளும்
5 முறை ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், சமீபத்திய ஆண்டுகளில் தனது சாதனைகளுக்கு ஏற்றவாறு செயல்படவில்லை. 2025 சீசனில், சிஎஸ்கே புள்ளி அட்டவணையில் கடைசி இடத்தைப் பிடித்தது. அதேசமயம், 2026-ல், அவர்கள் எட்டாவது இடத்தைப் பிடித்தனர். இதற்கு மாறாக, ரஜத் பதிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 2025 மற்றும் 2026ம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக ஐபிஎல் பட்டங்களை வென்று கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த சில சீசன்களாக இரு அணிகளுக்கும் இடையிலான மோதல்களில் ஆர்சிபியே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அறிக்கைகளின்படி, கடந்த 5 போட்டிகளில் பெங்களூரு நான்கில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியின் ஆர்சிபி அணியின் சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய எம்.எஸ்.தோனி, “காகிதத்தில் வலிமையாக இருப்பதை விட, களத்தில் வெளிப்படும் செயல்திறனே முக்கியம். ஒரு அணியில் உள்ள வீரர்களை விட, ஒரு குறிப்பிட்ட நாளில் அவர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதே முக்கியம். குறிப்பாக டி20 போன்ற குறுகிய வடிவப் போட்டிகளில், நல்ல அணிகளுக்கு இடையேயான வித்தியாசம் மிகக் குறைவு. வெற்றி நாட்களைப் போலவே தோல்வி நாட்களும் உண்டு. ஆனால், ஒரு அணி கடினமான காலங்களை எவ்வாறு கையாளுகிறது மற்றும் தனது தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்கிறது என்பதுதான் அதன் உண்மையான பலத்தை வெளிப்படுத்துகிறது” என்று கூறினார்.

ஐபிஎல் 2027-க்கு சிஎஸ்கே எப்படித் தயாராகும்?

ஐபிஎல் 2027ல் சிஎஸ்கே அணியின் திட்டம் குறித்து பேசிய தோனி, “காயங்களைக் குறைப்பதும், முக்கிய வீரர்கள் உடற்தகுதியுடன் இருப்பதை உறுதி செய்வதும் அடுத்த சீசனுக்கு மிகவும் அவசியம். வீரர்கள் தங்களின் பொறுப்புகளையும் கடமைகளையும் தெளிவாகப் புரிந்துகொண்டால், ஒரு அணியை நிர்வகிப்பது எளிதாகிவிடும்” என்று கூறினார்.

ALSO READ: ”நான் பழங்காலத்து கார் மாதிரி.. டிசம்பர்தான் கெடு’’.. ஐபிஎல் குறித்து மெளனம் கலைத்த தோனி.. என்ன சொன்னார்?

பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியம் குறித்துப் பேசிய தோனி, ”இந்த ஸ்டேடியம் பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமான மைதானம். அதிக ரன்களைக் குவிக்கக்கூடியது. பந்துவீச்சாளர்கள் மீது அழுத்தம் அதிகமாக இருந்தாலும், சிறப்பாகச் செயல்படுவதற்கு அது ஒரு சிறந்த மற்றும் சவாலான மைதானமாகும். பேட்ஸ்மேன்கள் அடிக்கும் பந்துகள் ஸ்டேடியத்தை விட்டு வெளியேறும். ஒரு பேட்ஸ்மேன் வலிமையானவராக இருந்து, அவர் பந்தை ஒழுங்காக அடிக்கவில்லை என்றாலும் கூட சிக்ஸூக்கு சென்றுவிடும்” என்று தெரிவித்தார்.

 

Follow Us