AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IPL 2027: யுவராஜின் புதிய அத்தியாயம்.. டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமனம்!

Yuvraj Singh Joins Delhi Capitals: முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங், ஐபிஎல் 2027 தொடருக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் உதவி மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 2007, 2011 உலகக் கோப்பை வெற்றியாளர், யுவராஜ், சௌரவ் கங்குலியுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளார். இளம் வீரர்களுக்கு வழிகாட்டிய அனுபவத்துடன், டெல்லிக்கு முதல் ஐபிஎல் பட்டத்தை வெல்ல உதவுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

IPL 2027: யுவராஜின் புதிய அத்தியாயம்.. டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமனம்!
யுவராஜ் சிங்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 13 Oct 2026 21:19 PM IST

முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங், ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் (Delhi Capitals) உதவிப் பயிற்சியாளராகவும் பேட்டிங் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தச் செய்தியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகம் இன்று அதாவது 2026 அக்டோபர் 13ம் தேதி வெளியிட்ட காணொளி ஒன்றில் அறிவித்துள்ளது. 44 வயதான யுவராஜ் சிங், 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர். இந்தநிலையில், யுவராஜ் சிங் (Yuvraj Singh) தற்போது தனது ஐபிஎல் பயிற்சியாளர் பணியை டெல்லி அணியுடன் தொடங்குகிறார்.

சமீப ஆண்டுகளில் பல முன்னணி மற்றும் வளர்ந்து வரும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும் யுவராஜ் சிங் வழிகாட்டியுள்ளார். யுவராஜுக்கு டெல்லி அணியுடன் ஏற்கனவே ஒரு பந்தம் உள்ளது. முன்னதாக, யுவராஜ் சிங் கடந்த 2015-ல் சாதனை விலையான ரூ.16 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் (அப்போதைய டேர்டெவில்ஸ்) அணியில் இணைந்து, அந்த சீசனின் 14 போட்டிகளிலும் விளையாடினார்.

ALSO READ: சூடுபிடிக்கும் ஐபிஎல் 2027! டெல்லி அணியின் பயிற்சியாளராக கங்குலி..!

யுவராஜ் சிங்கின் பேட்டி:


கங்குலியுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளதாக யுவராஜ் சிங், “டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் என் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதில் நான் உற்சாகமாக இருக்கிறேன். இந்த அணியுடன் எனக்கு நீண்டகாலத் தொடர்பு உள்ளது. மேலும், உரிமையாளர்களையும் எனக்கு நன்கு தெரியும். இது எனக்கு ஒரு சிறப்பான வாய்ப்பாக அமைகிறது. சௌரவ் கங்குலி மற்றும் பயிற்சி ஊழியர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

தனது ஐபிஎல் வாழ்க்கையில், யுவராஜ் 132 போட்டிகளில் விளையாடி, 2,750 ரன்கள் மற்றும் 36 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

யுவராஜ் சிங் அனுபவம்:

முன்னாள் ஆல்-ரவுண்டரான யுவராஜ், தற்போது இந்திய அணியின் முக்கியத் தூண்களாக விளங்கும் அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் போன்ற வீரர்களுக்கு தனிப்பட்ட முறையில் பயிற்சி அளித்துள்ளார். யுவராஜ் சிங் தனிப்பட்ட முறையில் சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட் உள்ளிட்ட பல வீரர்களின் வளர்ச்சியிலும் ஈடுபட்டுள்ளார். அபிஷேக்குடனான அவரது தொடர்பு குறிப்பாக அதிகமாக பேசப்படுகிறது. அதன் காரணமாகவே, அபிஷேக் சர்மா இந்தியாவின் மிகவும் அதிரடியான டி20 பேட்ஸ்மேன்களில் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

ALSO READ: டெல்லி அணியில் பண்ட் இதற்கு சரியாக இருப்பார்.. ட்விஸ்டை உடைத்த கங்குலி!

2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற அவரது அனுபவம். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சி அமைப்புக்கு மதிப்புமிக்கதாக அமையும். கடந்த சில ஆண்டுகளாகப் பல இளம் இந்திய நட்சத்திரங்களுக்கு வழிகாட்டிய யுவராஜ் சிங் இணைவது, தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு தனது முதல் ஐபிஎல் பட்ட வறட்சியை முடிவுக்குக் கொண்டுவர தூண்டுதலாக உள்ளது. சமீபத்தில், சௌரவ் கங்குலி டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட நிலையில், துணை பயிற்சியாளராக யுவராஜ் சிங் நியமிக்கப்பட்டது மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொடுத்துள்ளது.

Follow Us