AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IPL 2027: கடந்த ஆண்டு ஓய்வு.. இந்தாண்டு கோச்.. பந்துவீச்சு பயிற்சியாளரை நியமித்த சிஎஸ்கே!

CSK Bowling Coach: ஐபிஎல் 2025 தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடிய பிறகு, மோஹித் சர்மா, 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தனது ஓய்வை அறிவித்தார். மோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் உட்பட 3 அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

IPL 2027: கடந்த ஆண்டு ஓய்வு.. இந்தாண்டு கோச்.. பந்துவீச்சு பயிற்சியாளரை நியமித்த சிஎஸ்கே!
மோஹித் சர்மா
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 29 Sep 2026 17:50 PM IST

ஸ்டீபன் ப்ளெமிங் விலகியதை தொடர்ந்து ஐபிஎல் 2027 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியானது முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானை (Zaheer Khan) தங்களின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமித்தது. இதனை தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 38 வயதான ஒரு பந்து வீச்சாளரைத் தங்களின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியமிப்பது குறித்துப் பரிசீலித்து வருகிறது. அவர் பந்துவீச்சாளர் யாருமல்ல, 2025 வரை ஐபிஎல் தொடரில் விளையாடிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மா தான்.

ALSO READ: ஜாகீர் கானை பயிற்சியாளராக பரிந்துரைத்தது யார்..? சிஎஸ்கே CEO ஓபன்!

மோஹித் சர்மா பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதை டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, சிஎஸ்கே தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், “மோஹித் சர்மா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய பந்துவீச்சுப் பயிற்சியாளராக இணைவார். தலைமைப் பயிற்சியாளர் ஜாகீர் கான் அவரைப் பரிந்துரைத்தார். ஒரு வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாகச் செயல்பட்ட மோஹித் சர்மா, ஒரு பயிற்சியாளராகவும் தனது பணியைச் சிறப்பாகச் செய்வார் என்று நாங்கள் நம்புகிறோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய காசி விஸ்வநாதன், “வரும் வாரங்களில் ஜாகீர் கானின் ஆலோசனையின் பேரில் அடுத்தகட்ட பயிற்சி ஊழியர்களும் நியமிக்கப்படுவார்கள்.” என்று கூறினார்.

கடந்த ஆண்டு வீரர், இந்தாண்டு பயிற்சியாளர்..

ஐபிஎல் 2025 தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடிய பிறகு, மோஹித் சர்மா, 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தனது ஓய்வை அறிவித்தார். மோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் உட்பட 3 அணிகளுக்காக விளையாடியுள்ளார். மற்ற 3 அணிகள் குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகும்.

ALSO READ: சிஎஸ்கேவில் இதுதான் என் வேலை.. பயிற்சியாளர் பொறுப்பு குறித்து பேசிய ஜாகீர் கான்!

மோஹித் சர்மாவின் ஐபிஎல் வாழ்க்கை

மோஹித் சர்மா தனது ஐபிஎல் வாழ்க்கையில் 120 போட்டிகளில் விளையாடியுள்ளார். 119 இன்னிங்ஸ்களில் பந்துவீசி, 26.21 என்ற சராசரியில் 134 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில், ஒரு போட்டியில் 10 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்ததே இவரது சிறந்த பந்துவீச்சாகும். மோஹித் சர்மா ஒரு விக்கெட் வீழ்த்துபவராகக் கருதப்பட்டார். தனது மெதுவான பந்துகளால் மிகவும் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்களைக் கூட மோஹித் சர்மா ஏமாற்றியுள்ளார். இப்போது, ​​ஒரு பயிற்சியாளராக சென்னை அணிக்காக எப்படியான அறிவுரைகளை வழங்க போகிறார் என்பதை காண சிஎஸ்கே ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Follow Us