AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IPL 2027: ஜாகீர் கானை பயிற்சியாளராக பரிந்துரைத்தது யார்..? சிஎஸ்கே CEO ஓபன்!

Head Coach Zaheer Khan: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜகீர் கானை ஓராண்டுக்கு மட்டுமே ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம், ஜாகீர் கானை தலைமைப் பயிற்சியாளராக நீண்ட காலத்திற்குத் தக்கவைக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முடிவு செய்யவில்லை என்பது தெளிவாகிறது.

IPL 2027: ஜாகீர் கானை பயிற்சியாளராக பரிந்துரைத்தது யார்..? சிஎஸ்கே CEO ஓபன்!
சென்னை சூப்பர் கிங்ஸ்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 23 Sep 2026 08:00 AM IST

முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான், ஐபிஎல் 2027-க்கு (IPL 2027) முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் 2011 உலகக் கோப்பை வெற்றியில் ஜாகீர் கானின் பங்கு மறக்க முடியாதது. இதை தொடர்ந்து, பல ஆண்டுகளாக ஐபிஎல் தொடரிலும் விளையாடியுள்ளார். ஓய்வுக்குப் பிறகு, ஜாகீர் கான் பல ஆண்டுகள் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பணியாற்றினார். பின்னர்,  லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு வழிகாட்டியாக இருந்தார். தற்போது, ​​ஜாகீர் கான் ஸ்டீபன் ஃபிளெமிங்கிற்குப் பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் (Chennai Super Kings) தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ளார். இத்தகைய ஒரு முக்கியப் பொறுப்பை ஜாகீர் கானிடம் ஒப்படைக்க சிஎஸ்கே நிர்வாகத்திடம் தோனி கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ: மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவே எனது பயணம்.. சூர்யகுமார் யாதவ் உறுதி!

ஓராண்டுக்கு மட்டுமே ஒப்பந்தம்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜகீர் கானை ஓராண்டுக்கு மட்டுமே ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம், ஜாகீர் கானை தலைமைப் பயிற்சியாளராக நீண்ட காலத்திற்குத் தக்கவைக்க சென்னை அணி முடிவு செய்யவில்லை என்பது தெளிவாகிறது. ஜாகீர் கானின் எதிர்காலம் இனி அடுத்த ஐபிஎல் 2027 சீசனில் சிஎஸ்கே அணியின் செயல்பாட்டைப் பொறுத்தே அமையும்.

எம்.எஸ். தோனியின் பரிந்துரை:

சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் கிரிக்பஸ்ஸிடம், “இது நிர்வாகத்தின் முடிவு அல்ல. இந்த முடிவை கிரிக்கெட் குழு எடுத்தது. இது எம்.எஸ். தோனியின் பரிந்துரை. தோனியே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாடிடம் பேசினார், மேலும் அவர்கள் இருவரும் உரிமையாளர் ரூபா குருநாத்துடன் விவாதித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.” என்று கூறினார்.

ஜாகீர் கானின் கிரிக்கெட் மற்றும் பயிற்சி வாழ்க்கை

ஜாகீர் கான் இந்தியாவுக்காக 92 டெஸ்ட், 200 ஒருநாள் மற்றும் 17 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், அவர் 100 ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 311 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 282 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். டி20 சர்வதேசப் போட்டிகளில் 17 விக்கெட்டுகளையும், ஐபிஎல்-இல் 102 விக்கெட்டுகளையும் அவர் எடுத்துள்ளார்.

ALSO READ: சிஎஸ்கேவுக்கு ஹெட் கோச் கிடைச்சாச்சு.. களமிறங்கும் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்!

ஜாகீர் கான் 2018 முதல் 2022 வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் கிரிக்கெட் செயல்பாடுகளின் இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர், 2022 முதல் 2024 வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் உலகளாவிய கிரிக்கெட் மேம்பாட்டுத் தலைவராகப் பணியாற்றினார். ஆகஸ்ட் 2024-ல் ஜாகீர் கான் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் வழிகாட்டியாக நியமிக்கப்பட்டார. இருப்பினும் 2025 செப்டம்பர் மாதம் வரை மட்டுமே இந்தப் பதவியில் பணியாற்றினார்.

Follow Us