AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

CSK New Head Coach: தோனி-ஜாகீர் இடையே இப்படி ஒரு புரிதலா? ஆச்சர்யத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்!

MS Dhoni - Zaheer Khan: புதிய பயிற்சியாளருக்கான தேடல் ஆரம்பித்தபோது, ​​பிரண்டன் மெக்கல்லம் உள்ளிட்ட வெளிநாட்டு மற்றும் ராகுல் டிராவிட் உள்ளிட்ட உள்நாட்டு ஜாம்பவான்கள் உட்பட பல முக்கியப் பெயர்கள் அடிப்பட்டது. ஆனால் இந்தியாவின் 'ஜாக்' ஜகீர் கான், அனைத்து யூகங்களையும் பெரிய பெயர்களையும் பின்னுக்குத் தள்ளி பொறுப்பு ஏற்றுள்ளார்.

CSK New Head Coach: தோனி-ஜாகீர் இடையே இப்படி ஒரு புரிதலா? ஆச்சர்யத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்!
ஜாகீர் கான் - எம்.எஸ்.தோனி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 21 Sep 2026 21:54 PM IST

ஐபிஎல் தொடரின் (IPL 2027) மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ், 2027 ஐபிஎல் சீசன் முதல் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானை அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமித்துள்ளதை உறுதி செய்துள்ளது. வரவிருக்கும் வியூகம் மற்றும் நீண்ட காலத் திட்டமிடலைக் கருத்தில் கொண்டு, இந்த பொறுப்பை ஜாகீர் கானிடம் அணி நிர்வாகம் ஒப்படைத்துள்ளது. இனி ஜாகீர் கான் சிஎஸ்கே அணியின் (Chennai Super Kings) தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீபன் ஃபிளெமிங்கிற்குப் பதிலாகப் பொறுப்பேற்பார்.

ALSO READ: சிஎஸ்கேவுக்கு ஹெட் கோச் கிடைச்சாச்சு.. களமிறங்கும் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்!

இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான இடது கை வேகப்பந்து வீச்சாளராகக் கருதப்படும் ஜாகீர் கான், ஒரு குறிப்பிடத்தக்க சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையைக் கொண்டிருந்தார். இந்தியாவுக்காக ஜாகீர் கான் 92 டெஸ்ட் போட்டிகளில் 311 விக்கெட்டுகளையும், 200 ஒருநாள் போட்டிகளில் 282 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். மேலும், 17 டி20 சர்வதேசப் போட்டிகளில் 17 விக்கெட்டுகளையும் அவர் எடுத்துள்ளார். இந்தியாவின் 2011 உலகக் கோப்பை வெற்றியில் முக்கியப் பங்காற்றிய ஜாகீர் கான், அந்தத் தொடரில் 21 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகளை எடுத்தவராக திகழ்ந்தார்.

தோனியின் பரிந்துரை

எம்.எஸ். தோனியின் பரிந்துரையைத் தொடர்ந்து, வரவிருக்கும் ஐபிஎல் 2027 சீசனுக்காக முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜகீர் கானை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமித்துள்ளது. புதிய பயிற்சியாளருக்கான தேடல் ஆரம்பித்தபோது, ​​பிரண்டன் மெக்கல்லம் உள்ளிட்ட வெளிநாட்டு மற்றும் ராகுல் டிராவிட் உள்ளிட்ட உள்நாட்டு ஜாம்பவான்கள் உட்பட பல முக்கியப் பெயர்கள் அடிப்பட்டது. ஆனால் இந்தியாவின் ‘ஜாக்’ ஜகீர் கான், அனைத்து யூகங்களையும் பெரிய பெயர்களையும் பின்னுக்குத் தள்ளி பொறுப்பு ஏற்றுள்ளார். சென்னையின் ‘தல’ மகேந்திர சிங் தோனியின் தொலைநோக்குப் பார்வையும் அசைக்க முடியாத நம்பிக்கையுமே, ஜாகீர் கானுக்கு இந்த தலைமை பயிற்சியாளர் பொறுப்பை வழங்கியுள்ளது.

ஜாகீர் கான் ஒரு சிறந்த வியூக நிபுணர் மட்டுமல்ல, ஆட்டத்தை நொடி பொழுதில் மாற்றும் அபாரமான புரிதலையும் கொண்டவர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது ஒரு பெரிய மாற்றத்திற்கு உள்ளாகி வருவதையும், அதற்கு ஒரு புதிய மற்றும் இளம் அணியை உருவாக்க வேண்டிய தேவை இருப்பதையும் புரிந்துகொண்ட தோனி ஜாகீரை விட சிறந்த கிரிக்கெட் மூளை வேறு யாரும் இருக்க முடியாது என்பதை உணர்ந்துள்ளார்.

ALSO READ: இந்தியாவில் மினி ஐபிஎல் ஏலம்.. பிசிசிஐயின் முக்கிய முடிவு! இம்பாக்ட் வீரர் விதி தொடருமா?

தோனி ஜாகீர் கானை நம்பிய காரணம்..

2011 உலகக் கோப்பையின்போது, ​​இந்திய அணி சிரமங்களைச் சந்திக்கும்போதெல்லாம், தோனி ஜாகீர் கானை மட்டுமே நம்பியிருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியின்போது அப்போதைய இங்கிலாந்து கேப்டன் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் இந்தியப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக பேட்டிங் செய்தார். அப்போது, தோனி பந்தை ஜாகீர் கானிடம் பந்தை கொடுத்து, அவர் விரும்பியபடி களத்தில் செயல்பட முழு சுதந்திரம் அளித்தார். அந்த நேரத்தில் ஜாகீர் கான், தனது புத்தி கூர்மையை பயன்படுத்தி, அடுத்தடுத்த பந்துகளில் ஸ்ட்ராஸ் மற்றும் இயன் பெல் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்து, ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.

Follow Us