IPL 2027: சிஎஸ்கேவுக்கு ஹெட் கோச் கிடைச்சாச்சு.. களமிறங்கும் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்!
CSK Head Coach: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, கடந்த ஐபிஎல் 2009ம் ஆண்டு முதல் சிஎஸ்கே தலைமை பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங் சமீபத்தில் விலகியதை தொடர்ந்து, இந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் (Chennai Super Kings) தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் சிஎஸ்கே வீரர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இந்த பொறுப்பை ஜாகீர் கானிடம் சிஎஸ்கே அணி நிர்வாகம் ஒப்படைத்துள்ளது. இனி ஜாகீர் கான், சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீபன் ஃபிளெமிங்கிற்குப் பதிலாகப் பொறுப்பேற்பார். ஜாகீர் கான் 2017 ஐபிஎல் (IPL) வரை ஒரு வீரராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் (தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ்) அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
ALSO READ: 25 சதவீத பங்குகளை கேட்டாரா தோனி..? அதிரடி விளக்கத்தை கொடுத்த சிஎஸ்கே!




ஜாகீர் கானின் ஐபிஎல் வாழ்க்கை
Left Arm “Taking” Over! 💫🦁
Welcoming Zaheer Khan as the Head Coach of Chennai Super Kings!#WhistlePodu #Yellove 🦁💛
— Chennai Super Kings (@ChennaiIPL) September 21, 2026
ஐபிஎல் சீசனில் ஒரு பந்துவீச்சாளராக ஜாகீர் கானின் செயல்பாடு சிறப்பானதாகவே இருந்தது. 2017-ல் ஓய்வு பெறுவதற்கு முன்பு ஜாகீர் கான் மொத்தம் 100 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்தக் காலகட்டத்தில், ஒரு முறை நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியது உட்பட, 27.27 என்ற சராசரியில் 102 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் அவரது சிறந்த பந்துவீச்சை கணக்கில் எடுக்கும்போது, 17 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 4 விக்கெட்டுகளை அள்ளியுள்ளார்.
ஜாகீர் கானின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:
ஜாகீர் கான் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 2000 முதல் 2014 வரை இந்திய அணிக்காக மொத்தம் 303 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்தக் காலகட்டத்தின்போது 373 இன்னிங்ஸ்களில் 31.48 சராசரியில் 597 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதன்படி, ஜாகீர் கான் டெஸ்ட் கிரிக்கெட்டில் 311 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 282 விக்கெட்டுகளையும், டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 17 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
ALSO READ: இந்தியாவில் மினி ஐபிஎல் ஏலம்.. பிசிசிஐயின் முக்கிய முடிவு! இம்பாக்ட் வீரர் விதி தொடருமா?
பயிற்சியாளராக ஜாகீர் கானின் பயிற்சி அனுபவம்:
கடந்த ஐபிஎல் 2017 சீசனுடன் வீரராக ஓய்வு பெற்ற பிறகு, ஜாகீர் கான் பயிற்சி மற்றும் அணியின் மெண்டராக குறிப்பிடத்தக்க முத்திரையைப் பதித்துள்ளார். ஜாகீர் கான் 2018 முதல் 2022 வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் கிரிக்கெட் செயல்பாடுகளின் இயக்குநராகப் பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தின்போது மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக 2 ஐபிஎல் பட்டங்களை (2019 மற்றும் 2020) வென்றது. பின்னர் ஜாகீர் கான் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் வழிகாட்டியாகச் சேர்ந்தார்.